நாடு முழுவதும் 300 விமானங்கள் ரத்து! 25 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடல்!
சாத்தூர்: பட்டாசு ஆலையில் முகம் சிதைந்து சடலமாகக் கிடந்த காவலாளி; விசாரணையில் வெளியான பகீர் பின்னணி
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள குகன்பாறையில் தாயில்பட்டியைச் சேர்ந்த கேசவன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.
இந்த பட்டாசு ஆலையில், இரவு நேரக் காவலாளியாகத் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் (வயது 60) என்பவர் பணியாற்றி வந்தார்.
இவருடன், மாற்றுக் காவலராக குகன்பாறையைச் சேர்ந்த கருப்பசாமி (55) என்பவரும் சுழற்சி முறையில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காவலர் கருப்பசாமியை, பட்டாசு ஆலை உரிமையாளர் கேசவன் வேலையிலிருந்து நீக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த வேலை நீக்க நடவடிக்கைக்கு, தன்னுடன் பணியாற்றும் மாற்று காவலரான மோகன்ராஜ்தான் காரணம் எனக் கருப்பசாமி ஆத்திரம் அடைந்துள்ளார்.
இந்தநிலையில், பட்டாசு ஆலையில் பணி முடிந்து இரவு காவல் பணியில் மோகன்ராஜ் தூங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த கருப்பசாமி, தூங்கிக்கொண்டிருந்த காவலர் மோகன்ராஜ் தலையின் மீது கல்லைத் தூக்கிப்போட்டுள்ளார்.
இதில் முகம் சிதைந்து மோகன்ராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். இதை உறுதிபடுத்திவிட்டு கருப்பசாமி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இந்நிலையில், காலை வழக்கம்போல பட்டாசு ஆலை பணிக்குத் தொழிலாளர்கள் வந்தபோது காவலர் அறையில் மோகன்ராஜ் முகம் சிதைந்த நிலையில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெம்பக்கோட்டை போலீஸார், மோகன்ராஜ் உடலை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர்.
இதுதொடர்பான புகாரின்பேரில், கொலைசெய்து விட்டுத் தப்பி ஓடிய கருப்பசாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb