செய்திகள் :

கோவை: தன் வீட்டருகே விளையாடியதால் கோபம்; சிறுமியை நாயை விட்டு கடிக்க வைத்த பெண்; நடந்தது என்ன?

post image

கோவை திருச்சி சாலை, ராமநாதபுரம் அருகே அம்மன் குளம் பகுதி உள்ளது. அங்குத் தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது.

அந்த குடியிருப்பில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். எல் பிளாக்கில் பொன்வேல் (33) என்பவர் வசித்து வருகிறார்.

கோவை
கோவை

இவருக்கு 5 வயதில் ஒரு மகளும், 7 மாதத்தில் ஒரு மகனும் உள்ளனர். இவரின் மகள் அருகில் உள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

பொன்வேல் வீட்டின் அருகில் சௌமியா (50) என்ற பெண் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

சௌமியா தன்னுடைய வீட்டில் 5 நாய்களை வளர்த்து வருகிறார். இதனிடையே, பொன்வேலின் மகள் தன்னுடைய வீட்டுக்கு அருகில் விளையாடியதால் சௌமியா கோபமடைந்துள்ளார்.

இதையடுத்து தன் நாயை வைத்து சிறுமியைக் கடிக்க வைத்துள்ளார். காயமடைந்த சிறுமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

நாய்
நாய்

இதுதொடர்பாக சௌமியாவிடம் கேட்டதற்கு அவர் தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பொன்வேல் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சௌமியாவைக் கைது செய்தனர். சௌமியாவின் மகன்கள் சூர்யா மற்றும் சந்தானம் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சிறுமியைக் கடித்த நாயை, ப்ளூ கிராஸ் அமைப்பினர் மீட்டு காப்பகத்துக்குக் கொண்டு சென்றனர்.

கைது

சௌமியா குடும்பத்தினர் நாய்களை முறையாகப் பராமரிப்பதில்லை என்று தொடர்ந்து பல்வேறு புகார்கள் உள்ளன.

கடந்த 2023-ம் ஆண்டு இதேபோல நாயை விட்டு குழந்தையைத் தாக்கிய புகாரில் சௌமியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

தஞ்சாவூர்: பாஜக முன்னாள் மகளிரணி நிர்வாகி கொலை வழக்கு - சரண்டரான கணவரின் முதல் மனைவி மகன்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கழுகப்புலிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலன் (45). திமுகவிலிருந்து பா.ஜ.க-விற்கு மாறிய இவர் மதுரை மேலுார் பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். பா.... மேலும் பார்க்க

கல்லூரி வளாகத்தில் டிரைவர் வெட்டிக் கொலை... போலீஸ் விசாரணை!

சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூர் அருகே உள்ள கீரப்பாக்கத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (27). இவர் வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் டிரைவராக வேலை செய்து வந்தார். அதோடு ஆம்புலன்ஸ் டிரைவராகவும் இருந்து வந்தார... மேலும் பார்க்க

சென்னை: சிறுவனை கடித்த நாய் - விசாரணையில் இறங்கிய போலீஸ்

சென்னை போரூர் அருகே உள்ள சமயபுரம், ஸ்ரீராம் நகரில் குடும்பத்துடன் வசித்து வருபவர் வெங்கடேசன். இவரின் மகன் மோனிஷ் (6). இவன் நேற்றிரவு தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது மோனிஷ் திடீரென அலறினார்... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: தலையை துண்டித்து பெண் படுகொலை; கடையை பூட்டி விட்டு வீடு திரும்பியவருக்கு நேர்ந்த துயரம்

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் சரண்யா(35). இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது கணவர் சண்முகசுந்தரம் கடந்த 2021-ல் இறந்து விட்டார். இந்த நிலையில் பட்டுக்கோட்டை அருகே உள்ள கழுகப்புலிக்காடு கி... மேலும் பார்க்க

கோயில் விழாவில் வெடித்த மோதல்; அரிவாள் வெட்டு... குடிசைகளுக்கு தீ வைப்பு! - புதுக்கோட்டையில் பதற்றம்

புதுக்கோட்டை மாவட்டம், வடகாட்டில் நேற்று கோயில் திருவிழா நடைபெற்றது. அப்போது, அந்த திருவிழாவின் ஒருபகுதியாக தேரோட்டமும் நடத்தப்பட்டது. அப்போது, இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஒருவர்... மேலும் பார்க்க

`நான் அப்ளை செய்திடறேன்' - நீட் தேர்வுக்கு போலி ஹால் டிக்கெட் தயாரித்துக் கொடுத்த இளம்பெண் கைது!

மருத்துவப் படிப்புக்கான தகுதித்தேர்வான நீட் தேர்வு, நாடு முழுவதும் நடைபெற்றது. கேரள மாநிலம், பத்தனம்திட்டா அரசு மேனிலைப் பள்ளியில் நடந்த நீட் தேர்வு எழுத திருவனந்தபுரத்தை அடுத்த பாறசாலையைச் சேர்ந்த ஜி... மேலும் பார்க்க