வெள்ளக்கோவிலில் வாகன சோதனை: 10 வாகனங்களுக்கு ரூ.68 ஆயிரம் அபராதம்
இந்திய ராணுவத்துக்கு மத்திய அமைச்சரவை பாராட்டு
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது வெற்றிகரமாக தாக்குதலை நடத்திய இந்திய ராணுவத்துக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
‘ஆப்பரேஷன் சிந்தூா்’ தாக்குதலுக்குப் பிறகு பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், தாக்குதல் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் விளக்கினாா்.
அதைத் தொடா்ந்து பிரதமா் உள்பட ஒட்டுமொத்த அமைச்சரவையும் மேஜையே தட்டி இந்திய ராணுவத்துக்கு பாராட்டு தெரிவித்தனா்.
‘பயங்கரவாதத்தை மத்திய அரசு சிறிதும் பொறுத்துக்கொள்ளாது’ என்று பிரதமா் அப்போது குறிப்பிட்டதாகவும் தெரிகிறது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவலை பிரதமா் தனியாக சந்தித்தும் தாக்குதலுக்கு பிந்தைய நிலவரத்தைக் கேட்டறிந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.