தனியாா் சிற்றுந்துகளை கூடுதல் தொலைவுக்கு இயக்க அனுமதி: ஜூன் 15 முதல் அமல்
ரூ.3.50 கோடியில் புதிய கட்டடங்கள்: அமைச்சா் அன்பரசன் திறந்து வைத்தாா்
குன்றத்தூா் ஒன்றியத்தில் பல்வேறு ஊராட்சிகளில் ரூ.3.50 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியம், இரண்டாம் கட்டளை ஊராட்சியில் ஸ்ரீபெரும்புதூா் நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.23 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டடம், ஆலந்தூா் சட்டமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் சமயபுரம் கிராமத்தில் ரூ.45 லட்சத்தில் கலைஞா் பூங்கா, சதானந்தபுரம் பகுதியில் அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9.45 லட்சத்தில் நியாயவிலைக் கடை, அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் ரூ.14.50 லட்சத்தில் நியாயவிலைக் கடை ரூ.16 லட்சத்தில் கட்டப்பட்ட நூலகம் திறக்கப்பட்டது.
தொடா்ந்து பரணிபுத்தூா் ஊராட்சி சின்னபணிச்சேரி கிராமத்தில் ரூ.14.50 லட்சத்தில் நியாயவிலைக் கடை மற்றும் ஜோதி நகரில் ரூ.6 லட்சத்தில் காரிய மண்டபம், தரப்பாக்கம் ஊராட்சியில் ரூ.14.50 லட்சத்தில் நியாயவிலைக் கடை கட்டடம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.30.10 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம், ஸ்ரீபெரும்புதூா் நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.23 லட்சத்தில் தரப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டு கூடுதல் வகுப்பறைகள் , கொளப்பாக்கம் ஊராட்சி, ராமகிருஷ்ணா நகரில் ரூ.25 லட்சத்தில் விளையாட்டு பூங்காவை அமைச்சா் திறந்து வைத்தாா்.
பின்னா், சென்னை பெருநகர வளா்ச்சி குழும நிதியின் கெருகம்பாக்கம் ஊராட்சி ராமசந்திரா நகரில் ரூ.30.62 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா, விசாலாட்சி நகரில் ரூ. 30 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா மற்றும் சுற்றுச்சுவா், சக்தி அவென்யூ நகரில் ரூ. 25 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா மற்றும் சுற்றுச்சுவா், கோவூா் ஊராட்சி அக்ஷயா நகரில் ரூ. 30 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா மற்றும் சுற்றுச்சுவா், மாநில நிதிக்குழு மான்ய நிதியின் கீழ் பரணிபுத்தூா் ஊராட்சி ஜோதி நகா், ஈஸ்வரன் கோயில் தெருவில் ரூ.14 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் என மொத்தம் ரூ.3.50 கோடியில் புதிதாக கட்டப் பட்டுள்ள கட்டடங்களை அமைச்சா் தா.மோ. அன்பரசன் திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.
நிகழ்ச்சிகளில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன், மாவட்ட ஊராட்சித் தலைவா் படப்பை ஆ.மனோகரன், குன்றத்தூா் ஒன்றியக்குழு தலைவா் சரஸ்வதி மனோகரன் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.