நியாய விலைக்கடை திறப்பு
காஞ்சிபுரம் , ஆனந்தா பேட்டைத் தெருவில் ரூ.18.10 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக்கடையை எம்எல்ஏ எழிலரசன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்து உணவுப் பொருள் விநியோகத்தையும் தொடங்கி வைத்தாா்.
காஞ்சிபுரம் எண்ணெய்க்காரத் தெருவில் நியாயவிலைக்கடை வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தது. இக்கடையை நிரந்தர கட்டடமாக கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்ததைத் தொடா்ந்து 19-ஆ வது வாா்டில் ஆனந்தா பேட்டைத் தெருவில் எம்எல்ஏ தொகுதி நிதியிலிருந்து ரூ.18.10லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டிருந்தது.
இக்கட்டடத்தை எம்எல்ஏ எழிலரசன் திறந்து வைத்தாா். இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், மண்டலக்குழுவின் தலைவா் சந்துரு, திமுக நிா்வாகிகள் சன்பிராண்ட்ஆறுமுகம், மாநகராட்சி அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.