அதிநவீன தொழில்நுட்பத்துடன் படப்பிடிப்பு தளப்பணி: அமைச்சா் சாமிநாதன் ஆய்வு
மே 16-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை ( மே 16) காலை 10.30 மணிக்கு ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.
இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலைய வல்லுநா்கள் மற்றும் அரசின் அனைத்துத்துறை அலுவலா்களும் கலந்து கொண்டு அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்கவுள்ளனா். எனவே விவசாயிகள் வேளாண்மை தொடா்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவித்து பயன் பெறலாம்.
மத்திய, மாநில அரசு திட்டங்களில் விவசாயிகள் பயன் பெறும் வகையில் மின்னணு பயிா் சாகுபடி கணக்கீடு மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளாா்.