ஆபரேஷன் சிந்தூர்: ஜம்முவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் எதிரொலியாக ஜம்மு-காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையளிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாதி முகாம்களைக் குறிவைத்து, செவ்வாக்கிழமை நள்ளிரவில் இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.
பாகிஸ்தான் தரப்பில் இருந்து எப்போது வேண்டுமானாலும், பதில் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜம்மு- காஷ்மீரின் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் இன்று மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு, சம்பா, கதுவா, ரஜௌரி, பூஞ்ச் ஆகிய இடங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இன்று மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது இந்திய ராணுவம் திடீர் தாக்குதல்!