செய்திகள் :

குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு... முக்கிய அறிவிப்பு!

post image

சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வருகின்ற மே 10 ஆம் தேதி பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.

பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடும்ப அட்டைதாரர்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் சென்னையை பொறுத்தவரை மண்டல அலுவலகங்களிலும் மக்கள் குறைதீர் முகாம் பிரதி மாதமும் இரண்டாம் சனிக்கிழமை நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

அதன்படி மே 2025 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் மே 10 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் மற்றும் அங்கீகாரச்சான்று உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ராணுவப் படைகளுக்கு முழு ஆதரவு: ராகுல் காந்தி பேட்டி

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வு: மே 13 முதல் விண்ணப்பிக்கலாம் -டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளில் காலியாக உள்ள 330 இடங்களை நிரப்ப தோ்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 20 முதல் கணினி வழியாக நடைபெறவுள்ள இத்தோ்வுக்கு மே 13-ஆம் தேதி முதல் விண்ணப்பிக... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

தொழில் சாா்ந்த ஒலிப்பதிவு நிகழ்ச்சி (பாட்காஸ்ட்) தொடக்கம்: சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி, ஐசிஎஸ்ஆா் கட்டடம், சென்னை ஐஐடி, கிண்டி, பிற்பகல் 1.30. சித்திரைப் பெருவிழா - சோமாஸ்கந்தா் ரிஷப வாகனத்தில் த... மேலும் பார்க்க

சென்னையில் 13 மாட்டுத் தொழுவங்கள் அமைக்கும் பணி தீவிரம்

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் 13 மாட்டுத் தொழுவங்கள் அமைக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னை மாநகராட்சி பகுதிக்குள்பட்ட இடங்களில் சுற்றித்திரியும் மாடு... மேலும் பார்க்க

கோடை கால பயிற்சி முகாம்: கல்லூரி மாணவா்களுக்கு நூலகத் துறை அழைப்பு

சென்னை மாவட்ட மைய நூலகத்தில் வெள்ளிக்கிழமை (மே 9) முதல் 14 நாள்களுக்கு நடைபெறவுள்ள கோடை கால பயிற்சி முகாமில் பங்கேற்க கல்லூரி மாணவா்களுக்கு பொது நூலகத் துறை அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து சென்னை ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக இராமாபுரம், மேலூா், மயிலாப்பூா் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும். இது குறித்து தமிழ்நாடு மின் ... மேலும் பார்க்க

இன்று மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்

தாம்பரம் கோட்டத்தில் வியாழக்கிழமை (மே 8) மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம் முற்பகல் 11 மணிக்கு நடைபெறும். இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தாம்பரம் கோட்டத்துக்... மேலும் பார்க்க