செய்திகள் :

Face Pack: முட்டை, காபித்தூள், சர்க்கரை ஃபேஸ் பேக் முகத்துக்கு நல்லதா? – மருத்துவர் விளக்கம்!

post image

முட்டை, காபித்தூள், சர்க்கரை இவை மூன்றையும் கலந்து முகத்திற்குப் பேக்காக பயன்படுத்துவது தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவற்றை முகத்திற்குப் பயன்படுத்தலாமா; அவ்வாறு பயன்படுத்தினால் பாதிப்புகள் ஏதேனும் வருமா என்ற சந்தேகங்களுக்கு தோல் மருத்துவர் நித்திலா சந்திரசேகர் பதிலளிக்கிறார்.

Face pack
Face pack

''முட்டை, காபித்தூள், சர்க்கரையைக் கலந்து முகத்திற்கு பேக்காக போட்டு, அதன் மேலே டிஷ்யூ பேப்பரை முகத்தில் ஒட்டி, காய்ந்ததும் பீல் ஆஃப் பேஸ் பேக் (peel off face pack) போல உரித்து எடுக்கிறார்கள். இது ஒரு சாண்ட் பேப்பரை (Sanding Paper) முகத்தில் ஒட்டி இழுப்பதற்கு சமம். அதனால், இந்தக் கலவை முகத்தில் எரிச்சலை ஏற்படுத்தலாம். சர்க்கரை மற்றும் காபித்தூளை முகத்திற்கு ஸ்கிரப்பாகப் பயன்படுத்தினால் முகம் பளபளக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள். ஆனால், இந்த மாதிரிப் பொருள்கள் தோலை சேதப்படுத்தவே வாய்ப்பு அதிகம்.

உணவுப் பொருள்களான முட்டை, சர்க்கரை மற்றும் காபித்தூள் போன்ற பொருள்களை முகத்தில் தடவினால் அரிப்பு, எரிச்சல் மற்றும் முகம் சிவத்தல் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால், சிலருக்கு தோலில் அலர்ஜிகூட ஏற்படலாம். இதில் முட்டை இருப்பதால், சென்சிடிவ் ஸ்கின் கொண்டவர்களுக்கு முகப்பரு வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. இப்படிப்பட்ட முரட்டு சிகிச்சை செய்யாமல், உங்கள் சருமத்தை மென்மையாகப் பராமரிப்பதே சரி.

டாக்டர் நித்திலா சந்திரசேகர்.
டாக்டர் நித்திலா சந்திரசேகர்.

இதற்கு பதிலாக, முகத்தில் ப்ளாக் ஹெட்ஸ், ஒயிட் ஹெட்ஸ் நீக்க மருத்துவர்கள் தரும் க்ரீம்களைப் பயன்படுத்தலாம். ஏனென்றால், அவர்கள் உங்களுக்கு எந்த அளவுக்குப் பிரச்னை இருக்கிறது என்று சோதித்த பிறகுதான் மருந்தைப் பரிந்துரைப்பார்கள். இல்லையென்றால், அவற்றை நீக்குவதற்கு சரியான முறையில் கருவிகளைக் கொண்டு சிகிச்சை அளிப்பார்கள். முட்டை, காபித்தூள், சர்க்கரையைப் பயன்படுத்தி உரித்து எடுக்கிற அழகு சிகிச்சை வேண்டவே வேண்டாம்'' என்கிறார், டாக்டர் நித்திலா சந்திரசேகர்.

Health: உங்க தலைமுடிக்கு ஏற்ற ஷாம்பு எது? கண்டுபிடிக்கலாம் வாங்க!

ஒவ்வொரு வீட்டுக் குளியல் அறையிலும் தவிர்க்க முடியாத பொருளாகிவிட்டது ஷாம்பு. ஆனால், கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் எண்ணற்ற ஷாம்புகளில் சிறந்தது எது... தனக்குப் பொருந்தமானது எது என்ற குழப்பம் பெர... மேலும் பார்க்க

Beauty Tips: பியூட்டி பார்லருக்கு செலவழிக்க முடியாத பெண்களுக்கான அழகுக்குறிப்புகள்!

வேலை பார்க்கிற பல பெண்களுக்குத் தங்கள் அழகுக் குறித்த விழிப்புணர்வு இருந்தாலும்கூட, அதைச் செயல்படுத்துவதற்கான நேரம் கிடைக்காது. சிலருக்கோ, அடிக்கடி பியூட்டி பார்லருக்கு செலவழிக்க முடியாது. அப்படிப்பட்... மேலும் பார்க்க

தலைமுடி, மீசை, தாடி வளர்ச்சியைத் தூண்டுமா டெர்மா ரோலர்? – மருத்துவர் விளக்கம்!

''காலேஜ் படிக்கிற பசங்க மீசை, தாடி வளரவும் நெற்றியில் வரும் வழுக்கையைச் சரி செய்யவும் டெர்மா ரோலர் பயன்படுத்துறாங்க. அதுவும், மருத்துவரைச் சென்று பார்க்காமல் வீட்டிலேயே இந்த டெர்மா ரோலரைப் பயன்படுத்தி... மேலும் பார்க்க

Beauty: அழகே தக்காளி; கருமை போக்கி முகத்தை பளிச் ஆக்கும் தக்காளி!

'பியூட்டி பார்லருக்கெல்லாம் போறதுக்கெல்லாம் நேரமே இல்லீங்க' என்பவர்களுக்கு, அவங்க வீட்டி ஃப்ரிட்ஜிலேயே இருக்கிற குட்டிக்குட்டி பியூட்டி பார்லர் தக்காளிதாங்க. அதை எப்படியெல்லாம் பயன்படுத்தினா, நாம பளிச... மேலும் பார்க்க

pregnancy safe skin care: கர்ப்ப காலத்தில் எந்த சீரம், மாய்ஸ்ரைசர் பயன்படுத்தலாம்?

பொதுவாக கர்ப்ப காலத்தில் தோல் பராமரிப்பு ( ஸ்கின் கேர்) அவசியமாக இருக்கிறது. இளைய தலைமுறை, வயதானவர்கள் என அனைவரும் தங்களது தோலை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். முன்பெல்லாம் சருமத்தை எப... மேலும் பார்க்க