சூப்பர் ஸ்டிரைக்கர் விருதைப் பகிர்ந்துகொண்ட மும்பை வீரர்கள்..! ஐபிஎல் வரலாற்றில்...
Beauty Tips: பியூட்டி பார்லருக்கு செலவழிக்க முடியாத பெண்களுக்கான அழகுக்குறிப்புகள்!
வேலை பார்க்கிற பல பெண்களுக்குத் தங்கள் அழகுக் குறித்த விழிப்புணர்வு இருந்தாலும்கூட, அதைச் செயல்படுத்துவதற்கான நேரம் கிடைக்காது.
சிலருக்கோ, அடிக்கடி பியூட்டி பார்லருக்கு செலவழிக்க முடியாது. அப்படிப்பட்டவர்களுக்காக, வீட்டிலேயே செய்ய முடிந்த வீக் எண்ட் அழகு பராமரிப்பு டிப்ஸ் தருகிறார் பியூட்டிஷியன் மோனிஷா பிரசாந்த்.
இந்த வார இறுதியில் இதை ட்ரை செய்து பாருங்களேன்.

சனி, ஞாயிறு இரண்டு நாள்கள் விடுமுறை கிடைத்தாலும் சரி, ஞாயிறு மட்டும் ஒரே நாள் லீவு கிடைத்தாலும் சரி, காலையில் எழுந்ததும் பாதாம் எண்ணெய்யைத் தலைமுடியின் வேர்க்கால்களில் ஆரம்பித்து நுனி வரை தடவி ஊற விடுங்கள்.
தலையில் எண்ணெய் ஊறுகிற அதே நேரம், பப்பாளிப் பழம் அல்லது அதன் தோலை முகத்தில் கால் மணி நேரம் தடவி ஊற விடுங்கள்.

உங்கள் சருமம் வறண்டது என்றால், பப்பாளியுடன், சிறிதளவு பாசிப்பருப்பு மாவு, பால் ஏடு கலந்து பேக்காக போட்டுகொண்டு 15 நிமிடம் ஊற விடுங்கள்.
பிறகு, முகத்தைக் கீழிருந்து மேலாக வட்ட வட்டமாக தேய்த்துவிட்டு, ஈரத் துணியால் முகத்தை அழுந்தத் துடைத்து எடுங்கள்.
இறந்த செல்கள் அனைத்தும் போய்விடும். முகம் பளிச்சென்றாகும். ஃபேஷியல் செய்தது போன்ற உணர்வும் உங்களுக்குக் கிடைத்துவிடும்.
உங்கள் சருமம் எண்ணெய்ப்பசை கொண்டது என்றால், ஒரு துண்டு பப்பாளி, ஒரு டீஸ்பூன் கடலை மாவு, 4 சொட்டு தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
ஏற்கெனவே பப்பாளிப் பழ பேக் போட்டு வைத்துள்ள முகத்தில், இந்த அன்னாசிக் கலவையைத் தடவி, கால் மணி நேரம் காய விடுங்கள்.
பிறகு, முகத்தைக் கீழிருந்து மேலாக வட்ட வட்டமாக தேய்த்துவிட்டு, ஈரத் துணியால் முகத்தை அழுந்தத் துடைத்து எடுங்கள். இறந்த செல்கள் அனைத்தும் போய்விடும். முகம் பளிச்சென்றாகி விடும்.

இப்போது உடம்புக்குக் கவனம் கொடுக்க வேண்டிய நேரம். உடம்பு முழுக்க முடிந்தால் பாதாம் எண்ணெய், முடியாவிட்டால் தேங்காய் எண்ணெயை உடம்பு முழுக்கத் தடவிக் கொண்டு பாத்ரூமுக்குள் பத்து நிமிடங்கள் அப்படியே உட்கார்ந்து இருங்கள்.
பிறகு, வீட்டில் அரைத்த சீயக்காய் பொடியை அரிசிக் கஞ்சியில் கலந்து (முந்தைய நாளே எடுத்து வைத்துகொள்ளுங்கள்) தலையை அழுந்த தேய்த்து குளித்துவிடுங்கள்.
அடுத்து, கடலை மாவுடன் தயிரைக் கலந்து உடம்பு முழுக்கத் தடவி, கீழிருந்து மேலாக தேய்த்து தேய்த்து, இறந்த செல்களை எல்லாம் எடுத்துவிடுங்கள். உடம்பு வழு வழுவென்று ஆகி விடும்.
வாரம் முழுக்க சாமிப்படங்களுக்குப் போட்ட ரோஜாப்பூக்களை முந்தைய இரவே தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள். புது பூவையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அந்தத் தண்ணீரை வடிகட்டி குளித்து முடித்ததும் தலை முதல் பாதம் வரை ஊற்றிக் குளியுங்கள். ஒரு ரூபாய்கூட செலவில்லாத ஸ்பா இது.

பியூமிஸ் ஸ்டோன் கட்டாயம் இருக்கட்டும் உங்கள் பாத்ரூமில். குளித்து முடித்ததும் மறக்காமல், கால்களை அந்தக் கல்லால் தேய்த்துவிடுங்கள். இறந்த செல்கள், பாத வெடிப்பு இல்லாமல் உங்கள் ஸ்லிப்பரே லவ் பண்ணும்படி அழகாக இருக்கும் உங்கள் பாதங்கள்.
குளித்து முடித்து வந்தவுடனே நகங்களை விருப்பப்படி கட் செய்து, ஃபைல் செய்துகொள்ளுங்கள். கலர்லெஸ் நெயில்பாலிஷ் போட்டுக்கொள்ளுங்கள்.

குளித்த தலைமுடி காய்ந்ததும் நுனி முடியை லேசாக ட்ரிம் செய்துகொள்ளுங்கள். வாரம் முழுக்க நீங்கள் எந்த ஹேர்ஸ்டைல் செய்தாலும், இப்படி ட்ரிம் செய்வது இது ஒரு நீட் லுக் கொடுக்கும் உங்கள் ஹேர்ஸ்டைலுக்கு.
அடுத்த வரும் திங்கட்கிழமை, ஃபிரெஷ்ஷாக அலுவலகத்துக்குக் கிளம்ப இப்போது நீங்கள் ரெடி!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb