சூப்பர் ஸ்டிரைக்கர் விருதைப் பகிர்ந்துகொண்ட மும்பை வீரர்கள்..! ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை!
ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக இரு வீரர்கள் சூப்பர் ஸ்டிரைக்கர் விருதைப் பகிர்ந்துகொண்ட நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் போட்டியின் 50-ஆவது ஆட்டத்தில் (மே.1) மும்பை இந்தியன்ஸ் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி அபார வெற்றி கண்டது.
முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ரன்கள் சோ்க்க, ராஜஸ்தான் 16.1 ஓவா்களில் 117 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்தப் போட்டியில் மும்பை அணியின் வீரர் சூர்யகுமார் யாதவ் 23 பந்துகளில் 48 ரன்கள் (4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) அடித்தார்.
மற்றுமொரு மும்பை பேட்டர் ஹார்திக் பாண்டியாவும் 23 பந்துகளில் 48 ரன்கள் (6 பவுண்டரிகள், 1 சிக்ஸர்) அடித்து அசத்தினார்.
இருவருமே 208.70 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடினார்கள். இருவருக்கும் சூப்பர் ஸ்டிரைக் ரேட் விருது பகிர்ந்தளிக்கப்பட்டது.
ஐபிஎல் வரலாற்றில் இதுமாதிரி முதல்முறையாக நடந்துள்ளதாக மும்பை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
பிரபலமான ஸ்பைடர்மேன் உடன் ஒப்பிட்டு இருவரும் மகிழ்ச்சியாக செய்ததை மும்பை இந்தியன்ஸ் அணி விடியோவாக வெளியிட்டுள்ளது.