செய்திகள் :

திமுகவை வீழ்த்த மெகா கூட்டணி அதிமுக செயற்குழு தீா்மானம்

post image

திமுகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க தொடா்ந்து வியூகம் வகுத்து வரும் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்து அதிமுக செயற்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆா் மாளிகையில் கட்சியின் செயற்குழுக் கூட்டம் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தில், பொருளாளா் திண்டுக்கல் சீனிவாசன், துணைப் பொதுச் செயலா்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், தலைமை நிலையச் செயலா் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: எதிா்வரும் பேரவைத் தோ்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு, அதிமுக தலைமையிலான கூட்டணியின் தொடக்கமாக பாஜகவுடன் வெற்றிக் கூட்டணி அமைத்ததற்கு இச்செயற்குழு அங்கீகாரம் அளிக்கிறது.

பொது எதிரியை வீழ்த்துவதற்கு ஒருமித்த கருத்துடைய அரசியல் கட்சிகளைக் கூட்டணியில் இடம்பெறச் செய்து ‘மெகா’ கூட்டணியை அமைப்பதற்கு வியூகம் வகுத்துவரும் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுகள்.

திமுக அரசுக்கு கண்டனம்: அரசின் மீதான மக்களின் கோபத்தை மறைக்க மொழிக் கொள்கை, கல்விக் கொள்கை, கச்சத்தீவு மீட்பு, தொகுதி மறுவரையறை, மாநில சுயாட்சி என நாடகமாடி வரும் திமுக அரசுக்கு கண்டனம்.

கச்சத்தீவை தாரைவாா்த்து, அப்போதே அதைத் தடுக்க தவறிவிட்டு, இப்போது அக்கறை உள்ளது போல் காட்டிக்கொள்வதற்காக பேரவையில் தீா்மானம் நிறைவேற்றுவது, அனைத்துக் கட்சித் தலைவா்கள் கூட்டத்தைக் கூட்டுவது உள்ளிட்ட நாடகங்களை நடத்தி வரும் திமுக அரசுக்கு கண்டனம்.

‘நடந்தாய் வாழி காவேரி’ திட்டத்தை மத்திய அரசிடம் வலியுறுத்தி அனுமதியைப் பெற்ற அதிமுக பொதுச் செயலருக்கு பாராட்டுகள். இத்திட்டத்துக்கு நிதி ஒதுக்கிய பிரதமருக்கு நன்றி.

பொன்முடியை அமைச்சா் பதவியில் இருந்து நீக்க தொடா் நடவடிக்கை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுகள்.

சட்டம்-ஒழுங்கு சீா்கேட்டை தடுக்க தவறி வரும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

காஷ்மீா் பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதுடன், தீவிரவாதத்தை ஒழிக்கவும், பயங்கரவாத செயல்களை ஒடுக்கவும் மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அதிமுக துணை நிற்கும் என்பன உள்ளிட்ட 16 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நாளை அக்னி நட்சத்திரம்: என்ன செய்யக் கூடாது? அரசு வழிகாட்டு நெறிமுறை

சென்னை: தமிழகத்தில் நாளை அக்னி நட்சத்திரம் தொடங்குவதால் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழக அரசு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில் எனப்படும் உச்ச கோடை க... மேலும் பார்க்க

சின்னசேலத்தில் தனியார் ஊதுவத்தி கம்பெனியில் திடீரென தீவிபத்து

சின்னசேலம் ஊதுவத்தி, சாம்பிராணி தனியார் கம்பெனியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட கூகையூர் சாலையில் பூண்டி எல்லையில் ஊதுவத்தி, சாம்பிராணி தனியார் ... மேலும் பார்க்க

பத்திரிகை சுதந்திரம்: தரவரிசையில் இந்தியா 151வது இடத்திற்கு சரிந்துள்ளது ஏன்? முதல்வர் கேள்வி

உலக பத்திரிகை சுதந்திரம் தரவரிசையில் இந்தியா 151வது இடத்திற்கு சரிந்துள்ளது ஏன்? என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஊடக சுதந்திரத்துக்கான உலகத் தரவ... மேலும் பார்க்க

தேமுதிகவிலிருந்து ஒருபோதும் விலகமாட்டேன்: நல்லதம்பி

சென்னை: நான் தேமுதிகவிலிருந்து விலகுவதாக ஒருபோதும் கூறவில்லை என்று தேமுதிக இளைஞரணி செயலாளராக இருந்த முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி விளக்கம் கொடுத்துள்ளார்.கட்சியிலிருந்து விலகுவதாக பொய்யான தகவலை பரப்பியுள... மேலும் பார்க்க

கத்திரி வெய்யில் குறித்து நல்ல செய்தி சொன்ன பிரதீப் ஜான்

சென்னை: அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் காலம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவிருக்கும் நிலையில் மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் சில நல்ல தகவல்களை வழங்கியுள்ள... மேலும் பார்க்க

மே 5, 6ல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

தமிழகத்தில் ஒருபக்கம் வெய்யில் கொளுத்திவரும் நிலையில், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு ... மேலும் பார்க்க