தமிழகத்தில் 11 இடங்களில் வெயில் சதம்: நாளை கனமழைக்கு வாய்ப்பு
பாகிஸ்தானுக்கு ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று தடைகள்! இதனால் என்னவாகும்?
பாகிஸ்தானுடன் அனைத்து வகையான கடிதம் மற்றும் பார்சல் போக்குவரத்துக்கும் தடை விதித்தது மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த தடை உத்தரவால், பாகிஸ்தானில் இருந்து அஞ்சல் பரிமாற்றம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. சில மணி நேரங்களுக்கு முன்பு பாகிஸ்தானிலிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அனைத்துப் பொருள்களின் இறக்குமதிக்கும் தடை விதிக்கப்பட்டது.
தொடர்ந்து பாகிஸ்தான் கொடியுடன் எந்தக் கப்பலும் இந்திய துறைமுகங்களுக்குள் அனுமதிக்கப்படாது என்ற அறிவிப்பும் வெளியானது.
இன்று ஒரே நாளில் அடுத்தடுத்துத் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வந்த நிலையில், மூன்றாவது உத்தரவாக இந்த அஞ்சல் போக்குவரத்துக்கான தடை உத்தரவு வந்துள்ளது.
இதன் மூலம் பாகிஸ்தானில் இருந்து வான்வழி மற்றும் தரைவழி மூலம் அனைத்து வகையான அஞ்சல்கள் மற்றும் பார்சல்களின் பரிமாற்றம் நிறுத்தப்படுவதாக மத்திய அரசின் அஞ்சல் துறை அதிரடியாக அறிவித்துள்ளது.
காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் எதிரொலியாக அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுத்து வரும் மத்திய அரசு இன்று ஒரே நாளில் தொடர்ந்து தடை உத்தரவுகளாகப் பிறப்பித்து வருகிறது.