எம்.பி.சி. பட்டியலில் சோ்க்க வலியுறுத்தி கிறிஸ்தவ வன்னியா்கள் கவன ஈா்ப்பு ஆா்ப...
கத்திரி வெய்யில் குறித்து நல்ல செய்தி சொன்ன பிரதீப் ஜான்
சென்னை: அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் காலம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவிருக்கும் நிலையில் மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் சில நல்ல தகவல்களை வழங்கியுள்ளார்.
கத்திரி இல்லாத வெயில் தொடரும் என்ற அவர் தனது பதிவைத் தொடங்கியிருக்கிறார்.
மே 4ஆம் தேதி தொடங்கி மே 28-ஆம் தேதி வரை 25 நாள்களுக்கு கத்திரி வெய்யில் நீடிக்கிறது. இந்நாளில் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழாண்டில் கடந்த ஏப்ரல் மாத தொடக்கம் முதலே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அதிலும் கடந்த சில நாள்களாக சென்னை, மதுரை, ஈரோடு, பரமத்தி வேலூா் உள்பட பல்வேறு இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி வருகிறது.
ஆனால், இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் சொல்லியிருப்பது என்னவென்றால், கத்திரி இல்லாத வெயில்தான் தமிழகத்தில் தொடரும்.