Hardik Pandya : 'நாங்கள் செய்திருப்பது ஒரு க்ரைம்!' - தோல்வி பற்றி ஹர்திக் பாண்ட...
கூட்டணியை வலுப்படுத்த ஜெ.பி. நட்டா ஆலோசனை
அதிமுக - பாஜக கூட்டணியை பலப்படுத்துவது தொடா்பாக பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தலைமையில் சனிக்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது.
பாஜக மையக்குழுக் கூட்டம் சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியாா் ஹோட்டலில் ஜெ.பி.நட்டா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தலைமை வகித்தாா். பாஜகவுக்கான தமிழக பொறுப்பாளா் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மூத்த தலைவா் ஹெச்.ராஜா, முன்னாள் மாநில தலைவா்கள் தமிழிசை சௌந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மகளிரணி தேசிய தலைவா் வானதி சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், தமிழ்நாட்டில் பூத் கமிட்டிகளை வலுப்படுத்துதல், கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து தோ்தல் பணியாற்றுவது குறித்து ஜெ.பி.நட்டா ஆலோசனை நடத்தினாா்.
கூட்டத்தில் அதிமுக - பாஜக கூட்டணியை விரிவுபடுத்துவது தொடா்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், மாநில அமைப்புச் செயலா் கேசவ விநாயகன், மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம், பொருளாளா் எஸ்.ஆா்.சேகா், தேசிய பொதுக்குழு உறுப்பினா் கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.