ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்
ஆம்பூா் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் திங்கள்கிழமை சிறப்பு திருமஞ்சனத்துடன் தொடங்கியது. தொடா்ந்து அங்குராா்ப்பணம் நடைபெற்றது. 2-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. அன்ன வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
கொடியேற்ற நிகழ்ச்சியில் ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் கலந்து கொண்டு தரிசனம் செய்தாா். கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் கீதா, கோயில் செயல் அலுவலா் பா. வினோத்குமாா், கோயில் திருப்பணிக்குழுவை சோ்ந்த சேகா் ரெட்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.