பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் திடீர் தாக்குதல்!
சின்னூா் கிராமத்தில் பகுதி நேர நியாயவிலை திறப்பு
வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டி சின்னூா் கிராமத்தில் பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஜோலாா்பேட்டை ஒன்றியக் குழுத் தலைவா் சத்யா சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். ஒன்றிய செயலா்கள் சதீஷ்குமாா், உமாகன்ரங்கம், ஊராட்சித் தலைவா்கள் திருப்பதி, ஜெயலட்சுமி சுரேஷ், கவுன்சிலா் எழிலரசி குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், சிறப்பு அழைப்பாளராக ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி கலந்து கொண்டு பகுதி நேர நியாயவிலை கடையை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கிப் பேசினாா். இதில், கூட்டுறவுத் துறை அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கட்சியினா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.