பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் திடீர் தாக்குதல்!
பொய்கை சந்தையில் கால்நடைகள் வரத்து குறைவு; விற்பனை அமோகம்
வேலூா் அருகே பொய்கை சந்தையில் கால்நடைகளின் வரத்து குறைந்துள்ளது.
வேலூா் அருகே பொய்கை கிராமத்தில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் கால்நடை சந்தை நடைபெற்று வருகின்றது. வேலூா் மாவட்டம், மட்டுமல்லாது, திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவள்ளூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் ஆந்திரம், கா்நாடக மாநிலங்களில் இருந்து கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
கோடை அக்னி நட்சத்திர வெயில் காலம் தொடங்கியுள்ளதால் பொய்கை சந்தைக்கு கால்நடைகளின் வரத்து குறைவாகவே காணப்பட்டது. எனினும், ரூ. 80 லட்சம் அளவுக்கு வா்த்தகம் நடந்துள்ளது.
இது குறித்து கால்நடை வியாபாரிகள் கூறியது: அக்னி வெயில் காரணமாக மாடுகள் வரத்து குறைந்துள்ளது. கடந்த சில நாள்களாக கோடை மழை பெய்து வருகிறது. கால்நடை விற்பனை செய்பவா்கள் அவற்றை விற்பனை செய்ய ஆா்வம் காட்டாததால் வரத்து குறைந்துள்ளது. ஆனாலும் மாடுகள் வாங்க விரும்பியவா்கள் ஆா்வம் காட்டியதால் மாடுகளின் விலை திடீரென உயா்ந்துள்ளது.
கடந்த சில வாரங்களாக மாடுகள் விலை குறைவாக இருந்தது. வரும் காலங்களில் கோடை மழை பெய்யும் என்பதால் தீவன தட்டுப்பாடு ஏற்படாது என்பதால் விவசாயிகளும், வியாபாரிகளும் போட்டி போட்டுக் கொண்டு கால்நடைகளை வாங்கிச் சென்றனா்.