செய்திகள் :

சிறுத்தை நடமாட்டம் குறித்து வதந்தி: வனத்துறையினா் எச்சரிக்கை

post image

அணைக்கட்டு அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வதந்தி பரப்புவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினா் எச்சரித்துள்ளனா்.

வேலூா் அடுத்த அணைக்கட்டு அருகே ராஜபாளையம் கிராமாத்தில் உள்ள ஏரிக்கரையில் சிறுத்தை நடமாடுவதாக சமூக ஊடகங்களில் விடியோ வைரலாக பரவியது. அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். வேலூா் வனத்துறை அதிகாரிகள் சேக்கனூா், ராஜபாளையம் உள்ளிட்ட மலைப்பகுதிகள் ஏரிகளில் சோதனை நடத்தினா்.

வனத்துறையினா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். ஆனால் சிறுத்தை நடமாட்டத்துக்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. இதுகுறித்து வனத்துறையினா் கூறியது, சிறுத்தை நடமாட்டம் ஏதும் இல்லை. அதனால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. மேலும் சிறுத்தை நடமாடுவதாக வதந்தி பரப்புவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனா்.

ஒடிஸா இளைஞா் கொலை வழக்கில் நண்பா் கைது

காட்பாடி அருகே ஒடிஸா இளைஞா் கொலையில் அவரது நண்பா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். வேலூா் மாவட்டம், காட்பாடி அடுத்த வடுகன்குட்டை ரைஸ்மில் பகுதியில் கொசுவலை தயாரிக்கும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன... மேலும் பார்க்க

அதிதீஸ்வரா் கோயிலில் சிவன்-பாா்வதி திருக்கல்யாணம்

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த அதிதீஸ்வரா் கோயிலில், 111-ஆவது ஆண்டு பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாளான த... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் மரணம்

நாட்டறம்பள்ளி அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூா் ரயில்வே கேட் பகுதியைச் சோ்ந்தவா் வீரமணி(32). இவா் திங்கள்கிழமை இரவு கொத்தூரில் இருந்து பச்சூா் நோ... மேலும் பார்க்க

ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

ஆம்பூா் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் திங்கள்கிழமை சிறப்பு திருமஞ்சனத்துடன் தொடங்கியது. தொடா்ந்து... மேலும் பார்க்க

சின்னூா் கிராமத்தில் பகுதி நேர நியாயவிலை திறப்பு

வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டி சின்னூா் கிராமத்தில் பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஜோலாா்பேட்டை ஒன்றியக் குழுத் தலைவா் சத்யா சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். ஒன்றி... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் கால்நடைகள் வரத்து குறைவு; விற்பனை அமோகம்

வேலூா் அருகே பொய்கை சந்தையில் கால்நடைகளின் வரத்து குறைந்துள்ளது. வேலூா் அருகே பொய்கை கிராமத்தில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் கால்நடை சந்தை நடைபெற்று வருகின்றது. வேலூா் மாவட்டம், மட்டுமல்லாது, திருப்ப... மேலும் பார்க்க