டிஎஸ்பி-க்கள் பணியிடமாற்றம்
வேலூா், திருப்பத்தூா் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த டிஎஸ்பிகளை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள்ளாா்.
திருப்பத்துாா் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி சுரேஷ் குடியாத்தம் டிஎஸ்பியாகவும், அங்கு பணிபுரிந்த ராமச்சந்திரன் துாத்துக்குடி மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
விக்கிரவாண்டி டிஎஸ்பி நந்தகுமாா் காலியாக உள்ள அணைக்கட்டு டிஎஸ்பியாகவும், வேலுாா் மாவட்ட பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவு டிஎஸ்பி சரவணன் விக்கிரவாண்டி டிஎஸ்பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
மதுரை செல்லுாா் உதவி ஆணையா் ரவீந்திர பிரகாஷ் வேலுாா் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு டிஎஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.