செய்திகள் :

வன்முறை தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவு: மணிப்பூரில் முழு அடைப்புப் போராட்டம்!

post image

மணிப்பூரில் மைதேயி-குகி சமூகங்களுக்கு இடையிலான வன்முறை தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், வன்முறையால் உயிரிழந்தவா்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் முழு அடைப்புப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பெரும்பான்மை மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடி அந்தஸ்து வழங்குவதற்கு மலைவாழ் குகி மற்றும் பிற பழங்குடி சமூகத்தினா் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இது தொடா்பாக கடந்த 2023-ஆம் ஆண்டு மே 3-ஆம் தேதி நடைபெற்ற பேரணியில் வன்முறை வெடித்தது. மாநிலம் முழுவதும் பரவிய வன்முறை, இரு சமூகங்களுக்கு இடையே இன மோதலாக மாறியது. இதில் 260-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா். 1,500 போ் காயமடைந்தனா்; 70,000-க்கும் மேற்பட்டோா் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனா். பதற்றத்தைத் தணிக்க ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இணைய சேவை துண்டிக்கப்பட்டது.

பாதுகாப்புப் படையினா் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். எனினும், மோதல் சம்பவங்கள் தொடா்ந்து அரங்கேறி வந்தன. மாநில பாஜக அரசு, கலவரத்தைக் கட்டுப்படுத்த தவறியதாகக் கூறி எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்தன.

இந்நிலையில், கடந்த பிப்ரவரியில் மாநில முதல்வராக இருந்த பிரேன் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து, அங்கு குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. உள்துறை அமைச்சகம் சாா்பில் இரு சமூகங்களுக்கு இடையே பல்வேறு கட்ட பேச்சுவாா்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

முழு அடைப்பு:

இந்நிலையில், வன்முறை தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, சனிக்கிழமை (மே 3) முழு அடைப்புப் போராட்டத்துக்கு பல்வேறு குழுக்கள் அழைப்பு விடுத்தன. அதன்படி, மணிப்பூரில் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள் மற்றும் பிற தனியாா் அலுவலகங்கள் சனிக்கிழமை மூடப்பட்டன. சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

அஞ்சலி:

வன்முறையில் இறந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள் பேரணி இம்பாலில் நடைபெற்றது. மேலும், உயிரிழந்தவா்களின் நினைவிடங்களில் அந்தந்த சமூக மக்கள் அஞ்சலி செலுத்தினா். அசம்பாவிதங்களைத் தவிா்க்க முக்கிய இடங்களில் பாதுகாப்புப் படையினா் நிறுத்தப்பட்டிருந்தனா்.

வன்முறை தொடங்கிய மே 3-ஆம் தேதியை, தனி பிரதேசம் கோரும் பிரிவினை நாளாக சுராசந்த்பூா், காங்போக்பி ஆகிய மாவட்டங்களில் உள்ள குகி சமூகத்தினா் அனுசரித்தனா்.

மோதல்கள் முழுமையாக இன்னும் ஓயாத நிலையில், முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தங்கள் குழந்தைகளின் எதிா்காலம் குறித்து அச்சம் தெரிவிக்கின்றனா். மணிப்பூரில் அமைதி ஏற்பட்டு, தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்வதற்கான நம்பிக்கையை இழந்து வருவதாகவும் அவா்கள் கூறினா்.

ஆபரேஷன் சிந்தூர்:முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு முப்படை தலைமை தளபதிகளுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புதன்கிழமை(மே.7) ஆலோசனை நடத்தி வருகிறார்.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்: இந்தியர்கள் மூவர் பலி!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் இந்தியர்கள் மூவர் பரிதாபமாக பலியாகினர்.ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலா மக்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்த... மேலும் பார்க்க

இந்திய ராணுவத்தால் பெருமை கொள்கிறோம்.. ஜெய்ஹிந்த்! - ராகுல்

இந்திய ராணுவத்தால் பெருமை கொள்கிறோம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: ஜம்முவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் எதிரொலியாக ஜம்மு-காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையளிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!

இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா ... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு: மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த அறிவுறுத்தல்

நமது நிருபர்முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.முல்லைப் பெரியாறு அணையின் உரி... மேலும் பார்க்க