செய்திகள் :

மாமன்: "ஒரு தோல்விப் படத்துக்குப் பிறகு என்ன கடலுக்கு அடியில் பொதச்சுட்டாங்க; ஆனா..." - பிரசாந்த்

post image

வெற்றிமாறனின் `விடுதலை' படத்தில் கதை நாயகனாகச் சூரிக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து, `கொட்டுக்காளி', `கருடன்' எனத் தொடர்ந்து ஹிட் கொடுத்தார் நடிகர் சூரி.

இதையடுத்து பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி நடித்த 'மாமன்' திரைப்படம் வரும் மே 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாகக் காத்திருக்கிறது.

இயக்குநர் பாண்டியராஜி உதவி இயக்குநராக இருந்தவர் பிரசாந்த் பாண்டிராஜ். தாய்மாமனின் கதையாக உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி குடும்பங்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இதன் வெளியீட்டையொட்டி இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றிருந்தது.

Maaman
மாமன்

இவ்விழாவில் பேசிய இப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ், "இது தாய்மாமன் உறவு பற்றிய கதை மட்டுமல்ல, எல்லா உறவுகளுக்குமான கதை. எல்லாரும் இந்தக் கதை வழியாக தங்களைத் தொடர்புப்படுத்திப் பார்க்கக் கூடிய கதை.

'விலங்கு' மாதிரியான திர்ல்லர் படத்த எடுத்துட்டு, அதேமாதிரி திரில்லர் பண்ணாம, கொஞ்சம் இதயத்திற்கு இலகுவான படம் பண்ணலாம்னுதான் இந்தப் படத்த பண்ணுனேன்.

ஒரு பெரிய தோல்விப் படத்துக்குப் பிறகு என்னைக் கடலுக்கு அடியில் பொதச்சுட்டாங்க. என் மேல் நம்பிக்கை வைத்து 'விலங்கு' வெப்சீரிஸ் கொடுத்த மதன், ஐயப்பன் அண்ணன்களுக்கு நன்றி.

அந்த வெப்சீரிஸை வரவேற்று, பாராட்டி, மக்களிடம் கொண்டு சேர்த்து, பிரபலமாக்கிய பத்திரிக்கையாளர்கள், யூடியூப்பர்கள், மீம் கிரியேட்டர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி.

அவர்களால்தான் அந்த வெற்றி சாத்தியமானது. தோல்விக்குப் பிறகு நான் மீண்டு வருவதற்கு அதுவே பெரிய உதவிய இருந்தது. 'புரூஸ்லி' படத்தைக் கடுமையாக விமர்சித்தவர்கள், 'விலங்கு' படத்தைக் கொண்டாடித் தீர்த்தனர்" என்றார்.

இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ்

இதைத்தொடர்ந்து "நான் என் குடும்பத்தை நிறையக் காயப்படுத்தி இருக்கிறேன். முக்கியமாக என் மனைவியை நிறையக் காயப்படுத்தி இருக்கிறேன்.

இந்த மேடையில் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இந்தப் படத்தை அவருக்கே சமர்ப்பிக்கிறேன்" என்று கண்ணீருடன் பேசியிருக்கிறார் இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Ajith: `அஜித் சார் பெண்களுக்கு மரியாதை கொடுப்பார்; ஆனால்...' - வைரலாகும் திவ்யா சத்யராஜின் பதிவு

ஊட்டச்சத்து நிபுணரும், திமுக பிரமுகருமான நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யாராஜ், ''புதிய அரசியல் கட்சிகள் பெண்களுக்கு அரசியலில் மரியாதைக் கொடுப்பதில்லை" எனக் குறிப்பிட்டு பதிவு ஒன்றைப் போட்டிருக்கிறா... மேலும் பார்க்க

Varun Tej: 'வாழ்க்கையின் மிக அழகான பகுதி!' - கர்ப்பமானதை அறிவித்த லாவண்யா த்ரிபாதி

நடிகை லாவண்யா த்ரிபாதிக்கும் டோலிவுட் நடிகர் வருண் தேஜுக்கும் கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. லாவண்யா த்ரிபாதி தமிழில் 'பிரம்மன்', 'மாயவன்' ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.லாவண்யாவும் ... மேலும் பார்க்க

'இதுதான் இந்திய இராணுவத்தின் முகம்'- `ஆபரேஷன் சிந்தூர்' குறித்து திரைப்பிரபலங்களின் பதிவு

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ‘ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை இந்திய ராணுவம் நடத்தியிருக்கிறது.இந்த ஆபரேஷனில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள 9 தீவிரவாத இடங்களை இந்திய இராணுவம்... மேலும் பார்க்க

Jason Sanjay: ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன்; படத்தின் BTS ஸ்டில்ஸ் | Photo Album

Jason Sanjay: ஜி.கே. மணியின் இல்ல திருமண விழா; ஜேசன் சஞ்சய், விஜய் சேதுபதி சேலம் விமான நிலையம் வருகைசினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpXசினிமா தொடர்... மேலும் பார்க்க

சூர்யா 45' படத்தின் டைட்டில்... பிறந்த நாளில் காத்திருக்கும் ஆச்சரியங்கள்!

'ரெட்ரோ'வுக்கு கிடைத்த வரவேற்புகளில் மகிழ்ந்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். இன்னொரு பக்கம் அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவர் நடித்து வரும் 'சூர்யா 45'... மேலும் பார்க்க

Retro: " 'ரெட்ரோ'வுக்குப் பிறகு நான் எடுக்கப்போகும் படம்..!" - கார்த்திக் சுப்புராஜ்

சூர்யாவின் 'ரெட்ரோ' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. சூர்யாவின் பாரி கதாபாத்திரத்திற்கும் பூஜா ஹெக்டேவின் 'ருக்மணி' கதாபாத்திரத்திற்கும் மக்களின் அன்பு கிடைத்திருக்கிறது. ரெட்ரோசந்தோஷ் ... மேலும் பார்க்க