செய்திகள் :

Maaman: "எனக்கு வரும் 10 கதையில் 5 கதை சூரி அண்ணனுக்காக எழுதப்பட்டது" - லோகேஷ் கனகராஜ்

post image

வெற்றிமாறனின் `விடுதலை' படத்தில் கதை நாயகனாகச் சூரிக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து, `கொட்டுக்காளி', `கருடன்' எனத் தொடர்ந்து ஹிட் கொடுத்தார் நடிகர் சூரி.

இதையடுத்து பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி நடித்த 'மாமன்' திரைப்படம் வரும் மே 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகக் காத்திருக்கிறது.

இயக்குநர் பாண்டியராஜி உதவி இயக்குநராக இருந்தவர் பிரசாந்த் பாண்டிராஜ். தாய்மாமனின் கதையாக உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி குடும்பங்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இதன் வெளியீட்டையொட்டி இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றிருந்தது.

மாமன்
மாமன்

இவ்விழாவில் பேசிய லோகேஷ் கனகராஜ், "கமர்ஷியல் குடும்பப் படத்துக்கான எல்லாமும் இந்தப் படத்தில் இருக்கு. அதுலயே படத்தின் வெற்றி நிச்சயமாகிவிட்டது.

படம் சூப்பர் ஹிட்தான். சமீபமாக இதயத்திற்கு இலகுவான திரைப்படங்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வகையில் இந்தப் படமும் நல்ல வரவேற்பைப் பெறும்.

ஒருத்தர் வளர்கிறத பார்த்து எல்லாரும் சந்தோஷப்பட்டு நம்ம வளர்ச்சியாக அதைப் பார்க்கிறதுதான் உண்மையான வளர்ச்சினு நான் நினைக்கிறேன். சூரி அண்ணனின் வளர்ச்சி அப்படிப்பட்ட வளர்ச்சிதான்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

நானும் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து படங்களைத் தயாரிக்க ஆரம்பித்துவிட்டேன். என்கிட்ட கதை சொல்ல வருகிற இயக்குநர்கள் 10 கதை எழுதுனா, அதுல 5 கதை சூரி அண்ணனுக்காக எழுதுறாங்க. சூரிய அண்ணனோட அந்த வளர்ச்சி பயங்கர பெருசாக இருக்கு" என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Ajith: `அஜித் சார் பெண்களுக்கு மரியாதை கொடுப்பார்; ஆனால்...' - வைரலாகும் திவ்யா சத்யராஜின் பதிவு

ஊட்டச்சத்து நிபுணரும், திமுக பிரமுகருமான நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யாராஜ், ''புதிய அரசியல் கட்சிகள் பெண்களுக்கு அரசியலில் மரியாதைக் கொடுப்பதில்லை" எனக் குறிப்பிட்டு பதிவு ஒன்றைப் போட்டிருக்கிறா... மேலும் பார்க்க

Varun Tej: 'வாழ்க்கையின் மிக அழகான பகுதி!' - கர்ப்பமானதை அறிவித்த லாவண்யா த்ரிபாதி

நடிகை லாவண்யா த்ரிபாதிக்கும் டோலிவுட் நடிகர் வருண் தேஜுக்கும் கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. லாவண்யா த்ரிபாதி தமிழில் 'பிரம்மன்', 'மாயவன்' ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.லாவண்யாவும் ... மேலும் பார்க்க

'இதுதான் இந்திய இராணுவத்தின் முகம்'- `ஆபரேஷன் சிந்தூர்' குறித்து திரைப்பிரபலங்களின் பதிவு

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ‘ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை இந்திய ராணுவம் நடத்தியிருக்கிறது.இந்த ஆபரேஷனில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள 9 தீவிரவாத இடங்களை இந்திய இராணுவம்... மேலும் பார்க்க

Jason Sanjay: ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன்; படத்தின் BTS ஸ்டில்ஸ் | Photo Album

Jason Sanjay: ஜி.கே. மணியின் இல்ல திருமண விழா; ஜேசன் சஞ்சய், விஜய் சேதுபதி சேலம் விமான நிலையம் வருகைசினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpXசினிமா தொடர்... மேலும் பார்க்க

சூர்யா 45' படத்தின் டைட்டில்... பிறந்த நாளில் காத்திருக்கும் ஆச்சரியங்கள்!

'ரெட்ரோ'வுக்கு கிடைத்த வரவேற்புகளில் மகிழ்ந்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். இன்னொரு பக்கம் அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவர் நடித்து வரும் 'சூர்யா 45'... மேலும் பார்க்க

Retro: " 'ரெட்ரோ'வுக்குப் பிறகு நான் எடுக்கப்போகும் படம்..!" - கார்த்திக் சுப்புராஜ்

சூர்யாவின் 'ரெட்ரோ' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. சூர்யாவின் பாரி கதாபாத்திரத்திற்கும் பூஜா ஹெக்டேவின் 'ருக்மணி' கதாபாத்திரத்திற்கும் மக்களின் அன்பு கிடைத்திருக்கிறது. ரெட்ரோசந்தோஷ் ... மேலும் பார்க்க