மாநில உரிமைகளை எந்தக் காலத்திலும் விட்டுத் தரமாட்டோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உற...
தெலுங்கு இயக்குநர்களுடன் கைகோர்த்த சூர்யா, கார்த்தி!
நடிகர்கள் சூர்யா, கார்த்தி இருவரும் தெலுங்கு திரைப்பட இயக்குநர்கள் இயக்கத்தில் நடிக்க உள்ளனர்.
நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
ரெட்ரோவை தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
அதேபோல், நடிகர் கார்த்தியின் சர்தார் - 2 திரைப்படம் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது. இதனைத் தொடர்ந்து அவர் கைதி - 2 திரைப்படத்தில் இணையவுள்ளார்.
இந்த நிலையில், நடிகர் சூர்யா இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்திலும் கார்த்தி இயக்குநர் சைலேஜ் கொலனு இயக்கத்தில் ஹிட் - 4 படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி சகோதர நடிகர்கள் இருவரும் தெலுங்கு இயக்குநர்கள் படத்தில் ஒரே நேரத்தில் இணைந்திருப்பது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: சிம்பு - 49 பூஜையுடன் ஆரம்பம்!