பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணம்: மறைத்த சிஆா்பிஎஃப் வீரா் பணிநீக்கம்
பத்திரிகை சுதந்திரம்: தரவரிசையில் இந்தியா 151வது இடத்திற்கு சரிந்துள்ளது ஏன்? முதல்வர் கேள்வி
உலக பத்திரிகை சுதந்திரம் தரவரிசையில் இந்தியா 151வது இடத்திற்கு சரிந்துள்ளது ஏன்? என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஊடக சுதந்திரத்துக்கான உலகத் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் இடம் 151 என படுபாதாளத்தில் உள்ளது. காரணம் என்ன?
ஏனென்றால் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி கேள்விகளைக் கண்டாலே அஞ்சுகிறது. ஊடக அலுவலகங்களில் ரெய்டு நடத்துகிறது, செய்தியாளர்களைச் சிறையில் தள்ளுகிறது, பா.ஜ.க. அரசின் ஊழல்கள், உரிமை மீறல்கள் மற்றும் பெரும்பான்மைவாதப் போக்கை அம்பலப்படுத்துவோர்களை அடக்குகிறது.
23 வயது நடிகையின் புகைப்பட சர்ச்சைக்கு விராட் கோலி விளக்கம்!
உலகப் பத்திரிகை சுதந்திர நாளான இன்று யாருக்கும் அஞ்சாத ஊடகவியல் இல்லையென்றால் மக்களாட்சி இருளில் மாண்டு விடும் என்பதை நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்வோம். அதனால்தான், பத்திரிகை சுதந்திரத்தைக் காப்பது என்பது ஊடகங்களுக்காக மட்டும் அல்ல, குடிமக்கள் அனைவரின் கேள்வி கேட்கும், உண்மையை அறிந்துகொள்ளும், அதிகாரத்தை
நோக்கி உண்மையை உரைக்கும் உரிமைக்கானதாக ஆகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.