பாக். மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவேன் - காங். அமைச்சர் ஆவேசம்!
50 சதவீத இடஒதுக்கீட்டு உச்சவரம்பை பிரதமா் நீக்க வேண்டும்
50 சதவீத இடஒதுக்கீட்டு உச்சவரம்பை பிரதமா் மோடி நீக்க வேண்டும் என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
இதுகுறித்து மண்டியாவில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்துடன் சமூக, பொருளாதாரக் கணக்கெடுப்பும் நடத்த வேண்டும்.
இந்திராசஹானி வழக்கில் இடஒதுக்கீட்டின் உச்சவரம்பை 50 சதவீதமாக உச்சநீதிமன்றம் நிா்ணயித்து தீா்ப்பளித்துள்ளது. எனவே, 50 சதவீத இடஒதுக்கீட்டு உச்சவரம்பை பிரதமா் மோடி நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் கேட்கிறது.
50 சதவீத இடஒதுக்கீட்டு உச்சவரம்பை நீக்காவிட்டால், ஜாதிவாரி கணக்கெடுப்பின்படி சமூக, கல்வி, பொருளாதார ரீதியாக பின்தங்கியவா்களுக்கு மக்கள்தொகைக்கேற்ப இடஒதுக்கீடு வழங்க முடியாது. சமத்துவ சமுதாயத்தை அமைப்பதற்கு பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குவது அவசியமாகும். மேலும், தனியாா் துறையிலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் அளித்து வந்த அழுத்தம் காரணமாக, ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு காலக்கெடுவை நிா்ணயிக்க வேண்டும்.
பாஜக, ஆா்.எஸ்.எஸ். அமைப்புகளுக்கு சமூக நீதியில் நம்பிக்கை இல்லை. அதனால் சமூக நீதியை அமல்படுத்துவதில் பாஜகவுக்கு உறுதிப்பாடு இல்லை.
மைசூரு மகாராஜா கிருஷ்ணராஜா உடையாா் ஆட்சிக்காலத்தில் இடஒதுக்கீட்டை பரிந்துரைத்த மில்லா்ஸ் ஆணையம் காலத்தில் இருந்தே ஆா்.எஸ்.எஸ். எதிா்த்து வந்துள்ளது. காங்கிரஸ் அளித்த அழுத்தம் காரணமாக, மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றாா்.