இளம் பத்திரிகையாளா்கள் நோ்மையாக, துணிவுடன் இருக்க வேண்டும்: ‘தி நியூ இந்தியன் எ...
வி.ஜி.பியில் இந்தியாவின் முதல் 'சர்ப் வாட்டர் சவாரி' - என்ஜாய் பண்ணலாம் வாங்க!
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான விஜிபி பொழுது போக்கு பூங்கா திகழ்கிறது. இங்கு உள்ளூர் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தருகிறார்கள்.
இங்கு ரோலா் கோஸ்டர், டாப்கன், மிக்சர், பலூன் ரேசர் போன்ற ராட்டினங்களும், நீர்விளையாட்டுகளான வேவ் பூல், லேசிரிவர், டோர்னடோ போன்ற நீர் சறுக்கு விளையாட்டுகளுடன் இந்தியாவில் முதல்முறையாக ‘சர்ப் வாட்டர் சவாரி’ என்ற புதுமையான சவாரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விஜிபி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் இந்த புதிய “சர்ப் வாட்டர் சவாரி”யை தொடங்கி வைத்தார். விழாவில் விஜிபி நிருவாக இயக்குநர் விஜிபி ரவிதாஸ், முதன்மை இயக்குநர் விஜிபி ராஜாதாஸ், இயக்குநர் விஜிபிஆா் பிரேம்தாஸ் ஆகியோர் முன்னிலை வகுத்தனர்.
விஜிபி நிருவாக இயக்குநர் விஜிபி ரவிதாஸ் கூறுகையில், "பல புதுமையான சவாரிகளை இந்த கோடை விடுமுறைக்காக அறிமுகப்படுத்தியுள்ளோம். அதில் ஒன்றுதான் இந்த “சர்ப் வாட்டர் சவாரி”.
இது இளைஞர்களை மட்டுமன்றி சிறுவர்களையும் உற்சாகப்படுத்தும். அதுமட்டுமின்றி இன்னும் பல சவாரிகள் வரும் காலங்களில் அறிமுகப்படுத்தவுள்ளோம்" என்று கூறினார்.