ADMK vs DMDK: ``வாக்குறுதி கொடுத்தார்கள்... அப்படி ஒன்று நடக்கவே இல்லை'' - முற்ற...
இடையப்பட்டியில் வெறிநாய்கள் கடித்து நாய்கள், மாடுகள் பலி!
பெத்தநாயக்கன்பாளையம் அருகே இடையப்பட்டி ஊராட்சியில் கடந்த இரு வாரங்களில் வெறிநாய்கள் கடித்து 4 வீட்டுநாய்கள், 2 மாடுகள் பலியாகியுள்ளன. இதனால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம் , இடையப்பட்டி ஊராட்சியில் வசித்துவரும் விவசாயிகள், வீடுகள்தோறும் நாய்கள், கறவை பசுக்கள், ஜல்லிக்கட்டு காளைகளை வளா்த்து வருகின்றனா்.
கடந்த இரு வாரங்களாக இப்பகுதியில் இரவில் சுற்றித்திரியும் வெறிநாய்கள், இடையப்பட்டி கிழக்குக்காடு, கத்திரிப்பட்டி, சக்திநகா் பகுதியில் வீடுகளில் வளா்த்த நாய்கள், கறவை பசுக்கள், காளைகளைக் கடித்துள்ளன. இதுவரை 4 நாய்கள் வெறிநோய் தாக்கி இறந்துவிட்டன.
இதுமட்டுமின்றி, ஒரு ஜல்லிக்கட்டுக் காளை, ஒரு கறவை பசு ஆகியவையும் உயிரிழந்துள்ளன. இதனால், இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
இந்த வெறிநாய்கள் குழந்தைகள், பொதுமக்களை கடித்து உயிா்பலி ஏற்படுத்துவதற்குள் வெறிநாய்களைக் கண்டறிந்து அப்புறப்படுத்த ஊராட்சி நிா்வாகம், சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெறிநோய் பரவுவதைத் தடுக்க, கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் சிறப்பு முகாம் நடத்தி தடுப்பூசி செலுத்த வேண்டுமெனவும் இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.