இந்தியா உடனான பாதுகாப்பு ஒப்பந்தம்: இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல்
இந்தியா அணை கட்டினால் அழித்து விடுவோம்! பாகிஸ்தான் அமைச்சரின் மிரட்டலுக்கு இந்தியா பதிலடி!
சிந்து நதிப் படுகையில் அணை கட்டினால், அழித்து விடுவோம் என்று கூறிய பாகிஸ்தான் அமைச்சருக்கு பாஜக தலைவர் பதிலடி கொடுத்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது. அதில், சிந்து நதி நீர் பகிர்வு ரத்தும் அடங்கும். பாகிஸ்தானில் 80 சதவிகித விவசாய நிலங்களுக்கு சிந்து நதிதான் நீராதாரமாக இருந்து வந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்தியாவின் ஒரு துளி நீர்கூட பாகிஸ்தானுக்கு சென்றடையாது என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சிந்து நதிப் படுகையில் இந்தியா அணை ஏதேனும் கட்டினால், பாகிஸ்தான் என்ன செய்யும்? என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃபிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் தெரிவித்த பதிலில், ``சிந்து நதிப் படுகையில் இந்தியா அணை கட்டினால், அது பாகிஸ்தானுக்கு எதிரான ஆக்கிரமிப்பாக இருக்கும். எவ்வளவு பாதுகாப்பான கட்டடக்கலையாலும் இந்தியா அணை கட்ட முயற்சித்தாலும், பாகிஸ்தான் அதனை அழித்து விடும்’’ என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அமைச்சரின் கருத்துகளுக்கு பதிலளிக்கும்விதமாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன் கூறியதாவது, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரான கவாஜா, வெற்று அச்சுறுத்தல்களை மட்டுமே வெளியிடுகிறார்.
அவர் வெறுமனே ஒரு `அறிவிப்புத் துறை அமைச்சராக’ மட்டுமே உள்ளார்.
பாகிஸ்தானியர்களிடையே உள்ள அச்சம், அவர்களின் வெற்று அச்சுறுத்தல்கள் மூலம் தெரிகிறது. அவர்கள், இரவில் தங்கள் தூக்கத்தை இழந்துள்ளனர்’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க:பாகிஸ்தானுடன் போர் தீர்வல்ல: நடிகை திவ்யா