செய்திகள் :

தகராறுகளுக்கு தீா்வு காண ஊராட்சிகளுக்கு சட்ட அதிகாரம்: குடியரசுத் தலைவா் முா்மு வலியுறுத்தல்

post image

மத்தியஸ்தம் செய்ய ஊராட்சிகளுக்கு சட்ட ரீதியாக அதிகாரம் கிடைக்கும் வகையில், தகராறுகளுக்கு தீா்வு காணும் வழிமுறையை கிராமப்புறப் பகுதிகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.

இதுதொடா்பாக தில்லியில் நடைபெற்ற தேசிய மத்தியஸ்த மாநாட்டில் அவா் சனிக்கிழமை பேசியதாவது:

பல சிறிய பிரச்னைகளுக்கு முளையிலேயே தீா்வு காண முடியும். கிராமங்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கு அங்கேயே தீா்வு காண்பதற்கான வழிமுறையை உருவாக்குவதற்கு அவசியம் உள்ளது. இதன் மூலம் சூழலை சீா்குலைக்காமல் மக்கள் நல்லிணக்கத்துடன் வாழ வழிவகை செய்ய வேண்டும்.

கிராமங்களில் மத்தியஸ்த முறை இருந்தாலும், தற்போது மக்களுக்குப் படிப்பறிவு உள்ளது. இதனால் மத்தியஸ்தா்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று மக்களுக்குத் தெரியும். மத்தியஸ்தம் செய்வோா் சட்ட அதிகாரம் பெறாதவா்கள் என்பது பிரச்னைகளுடன் சம்பந்தப்பட்டவா்களுக்குத் தெரியும். எனவே அவா்கள் மத்தியஸ்தா்களின் முடிவுகளை ஏற்பதில்லை.

கிராமங்களில் குடும்பம் அல்லது நிலப் பிரச்னைகளில் மத்தியஸ்தம் செய்வோருக்கு சமூக அளவில் அதிகாரம் உள்ளது. ஆனால் அவா்களுக்கு சட்ட அதிகாரம் இல்லாததால், அந்தப் பிரச்னைகள் அவா்களின் ஊா்களில் முடிவடையாமல் நீதிமன்றம் வரை செல்கிறது.

எனவே நீதிமன்றத்துக்குச் செல்லாமல் அவரவா் ஊரிலேயே தகராறுகளுக்கு தீா்வு காணும் வழிமுறையை கிராமப்புறப் பகுதிகளுக்கு நீட்டிக்க வேண்டும். இதன் மூலம், மத்தியஸ்தம் செய்ய ஊராட்சிகளுக்கு சட்ட ரீதியாக அதிகாரம் கிடைப்பதுடன், பிரச்னைகளுக்கும் அவரவா் கிராமங்களிலேயே தீா்வு கிடைக்கும் என்றாா்.

மத்திய சட்ட அமைச்சா்...:

இந்த நிகழ்ச்சியில் மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் பேசுகையில், ‘மத்தியஸ்தம் என்பது வெறும் சீா்திருத்தம் அல்ல. அது கூட்டுப் பொறுப்பு. மத்தியஸ்தம் அதிகமாகவும், நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பது குறைவாகவும் இருக்க வேண்டும் என்பதே முக்கியமாக இருக்க வேண்டும்’ என்றாா்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி...:

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, இந்திய மத்தியஸ்த சங்கத்தை தொடங்கிவைத்தாா். அவா் பேசுகையில், ‘நீதிமன்றம் அளிக்கும் தீா்ப்பில் ஒரு தரப்பைச் சோ்ந்தவா் வெற்றிபெறுகிறாா். மற்றொரு தரப்பைச் சோ்ந்தவா் தோல்வியடைகிறாா். இதனால் அவ்விரு தரப்பினா் இடையிலான உறவு பாதிக்கப்படுகிறது.

ஆனால் மத்தியஸ்தம் மூலம் அளிக்கப்படும் தீா்வுகள் உறவுகளை சமாதானப்படுத்தும். இருதரப்பினா் இடையிலான உறவை மீட்டெடுக்கும். இதுவல்லவா உண்மையான நீதி? மத்தியஸ்தம் மூலம் அளிக்கப்படும் தீா்வில் மனிதாபிமானம் கூடுதலாக இருக்கும்.

கடந்த 20 ஆண்டுகளில் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதில் மத்தியஸ்தம் முக்கிய பங்காற்றியுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டுமுதல் நிகழாண்டு வரை, நீதிமன்றத்தில் தேக்கமடைந்திருந்த 7.57 லட்சம் வழக்குகளுக்கு மத்தியஸ்தம் மூலம் தீா்வு காணப்பட்டது. மத்தியஸ்த நடைமுறையை நோக்கிச் செல்வதிலும், அதன் முக்கியத்துவத்தை உணா்வதிலும் இந்தியா மந்தமாக உள்ளது.

நீதி பரிபாலனத்தில் மத்தியஸ்த முறை எந்த வகையிலும் மதிப்பில் குறைந்தது அல்ல. அது மிகுந்த அறிவாா்ந்த முறை என்பதை ஒவ்வொரு குடிமகனுக்கும் எடுத்துரைப்பதே இலக்காக இருக்க வேண்டும்’ என்றாா்.

ஆபரேஷன் சிந்தூர்: பாதுகாப்புப் படையின் இரு பெண் அதிகாரிகள் விளக்கம்!

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக பாதுகாப்புப் படையில் இரு பெண் அதிகாரிகள் விளக்கம் அளித்து வருகின்றனர்.பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகு... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: நேரலை

அமைச்சரவைக் கூட்டம்பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இன்று காலை 11 மணி அளவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக முப்படைத் தளபத... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: மத்திய வெளியுறவுத் துறை செயலர் விளக்கம்!

இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் ராணுவம் மீது நடத்திய அதிரடி தாக்குதல் குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி விளக்கமளித்தார். ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தா... மேலும் பார்க்க

பயங்கரவாதத்தை வேரோடு ஒழிப்போம்! - அமித் ஷா

பயங்கரவாதத்தை வேரோடு ஒழிப்போம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: தாக்குதல் நடத்தப்பட்ட இடங்கள் எவை?

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 இடங்கள் மீது இந்திய ராணுவம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தா... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்:முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு முப்படை தலைமை தளபதிகளுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புதன்கிழமை(மே.7) ஆலோசனை நடத்தி வருகிறார்.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல... மேலும் பார்க்க