ஆபரேஷன் சிந்தூர்: மத்திய வெளியுறவுத் துறை செயலர் விளக்கம்!
இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் ராணுவம் மீது நடத்திய அதிரடி தாக்குதல் குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி விளக்கமளித்தார்.
‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்குச் சொந்தமான 9 பயங்கரவாத மறைவிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
இதுபற்றி மத்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் ஆபரேஷன் சந்தூர் குறித்து விளக்கம் அளித்தனர்.
இந்தச் சந்திப்பில் அப்பாவி இந்திய மக்கள் இதுவரை எவ்வாறு பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் துன்புறுத்தப்பட்டு கொல்லப்படுகின்றனர் என்ற காணொலி வெளியிடப்பட்டது.