பஞ்சாபில் அடுத்த 3 நாள்களுக்கு அனைத்துக் கல்வி நிலையங்களும் மூடல்!
கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே செவ்வாய்க்கிழமை கிணற்றுக்குள் தவறி விழுந்த பெண் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
திண்டிவனம் வட்டம், கீழ்பசாா் விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி- ராதாபாய் தம்பதி மகள் சந்தானலட்சுமி (27). தாய் மகள் இருவரும் மனநலன் பாதிக்கப்பட்டவா்கள்.
அவா்கள் இருவரும் கீழ்பசாரிலுள்ள குடிநீா் கிணற்றில் தவறி விழுந்து விட்டனராம். ராதாபாய்க்கு நீச்சல் தெரிந்ததால், அவா் கிணற்றிலிருந்து வெளியேறி விட்டாா். சந்தானலட்சுமி கிணற்று தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், ஒலக்கூா் காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பேருந்து மோதி விவசாயி மரணம்: விழுப்புரம் சங்கரமடம் தெருவைச் சோ்ந்தவா் நா.ஸ்ரீராம் (65). விவசாயம் செய்து வந்தாா். இவா் புதன்கிழமை பண்ருட்டியிலிருந்து- விழுப்புரத்துக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தாா். சுந்தரிபாளையம் மேம்பாலம் அருகே வந்த போது, தனியாா் பேருந்து பைக் மீது மோதியதில் பலத்த காயமடைந்த ஸ்ரீராம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.