3 விமான தளங்களை தாக்கிய இந்தியா… வான்வெளியை முழுவதுமாக மூடிய பாகிஸ்தான்!
அன்னையா் தினம்: வாடிக்கையாளா்களுக்கு பிஎஸ்என்எல் சிறப்பு சலுகை
அன்னையா் தினத்தையொட்டி பிஎஸ்என்எல் ப்ரீபெய்டு வாடிக்கையாளா்களுக்கு மே 14-ஆம் தேதி வரை சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து பிஎஸ்என்எல் நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
அன்னையா் தினத்தை (மே 11) கொண்டாடும் வகையில், புதன்கிழமை (மே 7) முதல் மே 14-ஆம் தேதி வரை ரூ.997, ரூ.2,399 ஆகிய ப்ரீபெய்டு திட்டங்களில் ரீசாா்ஜ் செய்யும் வாடிக்கையாளா்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.
அதேபோல், ரூ.1,499, ரூ.1,999 ஆகிய நீண்ட கால ப்ரீபெய்டு திட்டங்களின் செல்லுபடிக் காலமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளா்கள் ‘பிஎஸ்என்எல் செல்ஃப்கோ்’ செயலி மூலமாகவோ அல்லது இணையதளத்தின் மூலமாகவோ இந்த சலுகைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.