பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - தில்லி போட்டி மீண்டும் தொடங்குமா?
India Pakistan: 'தொடர்ந்து பறக்கும் டிரோன்கள்; எல்லையில் சிலர் காயம்' - பாதுகாப்புத்துறை சொல்வதென்ன?
மூன்றாவது நாளாக இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்துவதும், பதிலுக்கு இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையாக இருக்கிறது.
தற்போது, இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் எக்ஸ் பக்கத்தில் பாகிஸ்தான் தாக்குதல் குறித்து கூறியிருப்பதாவது...
"இந்தியா - பாகிஸ்தான் எல்லை மற்றும் கட்டுப்பாட்டு எல்லைக் கோடு அருகே உள்ள 26 இடங்களில் டிரோன்கள் தென்பட்டுள்ளன. இவை ஆயுதம் தாங்கிய டிரோன்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அந்த 26 இடங்களில் பாரமுல்லா, ஸ்ரீநகர், அவந்திபோரா, நக்ரோடா, ஜம்மு, ஃபெரோஸ்பூர், பதான்கோட், ஃபாசில்கா, லால்கர் ஜட்டா, ஜெய்சால்மர், பார்மர், புஜ், குவார்பெட் மற்றும் லக்கி நாலா ஆகிய இடங்கள் அடங்கும்.

இந்திய ராணுவம் மிகுந்த கவனத்தோடு...!
துரதிர்ஷ்டவசமாக, ஆயுதம் தாங்கிய டிரோன் ஒன்று, ஃபெரோஸ்பூரில் உள்ள மக்கள் வாழும் பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், உள்ளூரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் சிலர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம் மிகுந்த கவனத்தோடு, ஆன்டி-டிரோன் இயந்திரம் மூலம் இந்த மாதிரியான வான்வழி தாக்குதல்களை டிராக் செய்து வருகிறது. நிலைமை உன்னிப்பாகவும் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு, தேவையான இடங்களில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எல்லைப் பகுதிகளில் உள்ள மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும், தேவையில்லாமல் வெளியே நடமாட வேண்டாம் என்றும், உள்ளூர் அதிகாரிகள் வழங்கிய விதிமுறைகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பீதி அடையத் தேவையில்லை என்றாலும், விழிப்புணர்வும் முன்னெச்சரிக்கையும் அவசியம்." எனத் தெரிவித்துள்ளது.
Drones have been sighted at 26 locations along the International Border and LoC with Pakistan. These include suspected armed drones. The locations include Baramulla, Srinagar, Avantipora, Nagrota, Jammu, Ferozpur, Pathankot, Fazilka, Lalgarh Jatta, Jaisalmer, Barmer, Bhuj,…
— Ministry of Defence, Government of India (@SpokespersonMoD) May 9, 2025