`இந்தியாவும் பாகிஸ்தானும் மோதலை நிறுத்த ஒப்புக்கொண்டதில் மகிழ்ச்சி' - அமெரிக்க அ...
Sindoor: `இப்போது நாட்டுக்காக என் குங்குமத்தை அனுப்புகிறேன்’ - மணமகளின் வைரல் வீடியோவின் பின்னணி
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கானின், பச்சோரா தாலுகாவில் உள்ள புங்கானைச் சேர்ந்தவர் மனோஜ் தியானேஷ்வர் பாட்டீல். இந்திய ராணுவத்தில் பணியாற்றுகிறார். மே 5 திங்கட்கிழமை பச்சோரா தாலுகாவில் உள்ள கலாம்சாரா கிராமத்தைச் சேர்ந்த யாமினி என்றப் பெண்ணுடன் அவருக்கு திருமணம் நடந்தது. அதற்கு அடுத்த நாள் இந்தியா - பாகிஸ்தான் இடையே இருந்த மோதல்போக்கு தாக்குதலாக தொடங்கியது. அதனால், 8-ம் தேதி மீண்டும் ராணுவப் பணியில் இணைந்துகொள்ள வேண்டும் என மனோஜ் தியானேஷ்வர் பாட்டீலுக்கு ராணுவம் உத்தரவிட்டது
सगळ काही भारत मातेसाठी...
— Ganesh Pokale... (@P_Ganesh_07) May 9, 2025
लग्नाच्या तीन दिवसांनंतर महाराष्ट्राचे सुपूत्र मनोज पाटील देश सेवेसाठी रवाना... #oprationsindoor#IndianNavyAction#IndiaPakistanTensions#jalgaonnews#India#army#manojpatil#देशसेवाpic.twitter.com/1gmbhYcoTD
அதனால் அவர் மே 8 வியாழக்கிழமை மீண்டும் ராணுவத்துக்குப் புறப்பட்டார். அவரை மணமக்கள் வீட்டார் ரயில் நிலையத்துக்கு வந்து வழியனுப்பி வைத்த வீடியோ சமூக ஊடகத்தில் வைரலானது.
அப்போது மணமகள் யாமினி பாட்டீல், ``நாட்டை விட எதுவும் பெரியதல்ல. நான் எப்போதும் என் கணவருடன் இருக்கிறேன். இப்போது நாட்டைப் பாதுகாக்க என் சிந்தூரத்தை (குங்குமத்தை) அனுப்புகிறேன்." எனப் பேசினார்.