போர் ஒத்திகைப் பயிற்சி: "எனக்கு நாடுதான் முக்கியம்" - திருமணத்தை 2 மணி நேரம் தள்ளிவைத்த மணமகன்
இந்தியா பாகிஸ்தான் இடையே தொடரும் பதற்றமான சூழலைச் சமாளிக்க, அனைத்து மாநில அரசுகளும் போர் ஒத்திகையை நிகழ்த்த வேண்டும் என இந்திய அரசு கேட்டுக்கொண்டது.
அதன் அடிப்படையில், "போர்க்காலங்களின்போது இந்திய எல்லைப் பகுதிகளில் அந்நிய போர் விமானங்கள் நுழைந்தால் சைரன் ஒலி எழுப்பப்படுவது வழக்கம்.
ஒத்திகையின்போது இதுபோல சைரன் ஒலியை எழுப்புவது, பாதுகாப்பான இடங்கள் குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிப்பது, சைரன் ஒலியின்போது மக்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்த அறிவுரைகளை வழங்குவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும்." என வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்தப் போர் ஒத்திகைப் பயிற்சி நிகழ்வில் கலந்துகொள்வதற்காகப் பீகார் மாநிலத்தில் ஒரு மணமகன் திருமணத்தை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகத் தள்ளி வைத்திருக்கிறார்.
இது தொடர்பாக வெளியான தகவலில், பீகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தில் வசிக்கும் சுஷாந்த் குஷ்வாஹா, புதன்கிழமை மாலை 6 மணிக்கு மணமகளின் வீட்டிற்குப் பராத் ஊர்வலம் செல்லத் தயாராக இருந்தார்.
அப்போது அரசின் போர் ஒத்திகைப் பயிற்சி வழங்கப்படுவதாகத் தகவல் வந்திருக்கிறது. அதில் பங்கெடுக்க மணமகன் முடிவெடுத்திருக்கிறார்.
இது தொடர்பாகப் பேசிய மணமகன் சுஷாந்த் குஷ்வாஹா, ``நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதற்குக் காரணம் என் திருமணம் மட்டுமல்ல.
இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் நுழைந்து தீவிரவாதத் தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தியிருக்கிறது.
இரு நாட்டுக்கும் இடையே நீடிக்கும் பதற்றமான சூழலில் இந்தியா அரசின் போர் ஒத்திகைப் பயிற்சி நடந்தது.

தேசியப் பாதுகாப்புப் பயிற்சியில் பங்கேற்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட 244 மாவட்டங்களில் எனது மாவட்டமும் ஒன்று என்பதை அறிந்தவுடன், பாதுகாப்புப் பயிற்சியில் சேருவதற்கான எனது முடிவைக் குடும்பத்தினருக்குத் தெரிவித்தேன்.
இந்தப் பயிற்சியில் நான் ஒரு பகுதியாக இருந்தது பெருமையான தருணம். எனக்குத் திருமணத்தை விட நாடுதான் பிரதானம்.
ராணுவ வீரர்கள் எல்லைகளில் சென்று சண்டையிடுவார்கள். தேவைப்பட்டால், நாங்களும் அதைச் செய்வோம்" என்றார்.
அவரின் பயிற்சி ஒத்திகைக்குப் பிறகு திருமண ஏற்பாடுகள் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs