பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவசரகால கொள்முதல் அதிகாரம்: மாநிலங்களுக்கு மத்திய அரசு...
முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை!
முன்னாள் ஆயுதப்படை வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சம் பெற்ற நிலையில், நேற்றிரவு பாகிஸ்தான் ராணுவத்தினர் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் வீசி இந்தியாவின் எல்லைப்புற நகரங்களாக ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு - காஷ்மீர் மீது கடுமையான தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்தினர் எஸ்-400-ஐ பயன்படுத்தி ஏவுகணை நடுவானிலேயே அழித்து ஒழித்தனர்.
இந்த நிலையில், தற்போதைய நிலைமை குறித்து பல்வேறு பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடியின் தில்லி இல்லத்தில் முன்னாள் வீரர்களுடன் விரிவான கலந்துரையாடல் நடத்தினார்.
இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அமைச்சர்கள் உள்ளிட்டோரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இவர்கள் மட்டுமின்றி, முன்னாள் விமானப்படைத் தளபதிகள், ராணுவத் தளபதிகள், கடற்படைத் தளபதிகள் மற்றும் நாட்டிற்கு சேவை செய்த பல வீரர்களும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்