அயாத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த யோகி ஆதித்யநாத்
உ.பி.: கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுவனின் சடலம் வயலில் இருந்து மீட்பு
ஹத்ராஸில் கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் 7 வயது சிறுவனின் சடலம் வயலில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஹத்ராஸில் தினை வயல் ஒன்றில் இருந்து 7 வயது சிறுவனின் சடலம் கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். பலியான சிறுவன் குதிபுரி ஜதன் கிராமத்தைச் சேர்ந்த ஜீவன் என அடையாளம் காணப்பட்டுள்ளான்.
சடலத்தை மீட்ட போலீஸார் உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மே 8 ஆம் தேதி, தனது தந்தை ராஜ்பால் சிங்கின் ஆலைக்கு அருகில் உள்ள வயலுக்குச் சென்று துப்புரவு பணிக்குச் சென்றபோது, சிறுவன் காணாமல் போனதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தில்லியில் 60 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து!
குடும்பத்தினர் ஆரம்பத்தில் சிறுவனை தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் சிறுவன் கிடைக்காததால் போலீஸில் காணாமல் போனதாக புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் கடத்தல் வழக்கு பதிவு செய்து போலீஸார், சிறுவனை தேடி வந்தனர்.
இந்த நிலையில் வயலில் இருந்து சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். சடலத்தில் நிறைய காயங்கள் இருந்ததோடு மட்டுமல்லாமல் பெருமளவு சிதைந்துவிட்டதாகவும், எனவே உடற்கூராய்வு அறிக்கை வந்த பின்னரே மீதமுள்ள தகவல்கள் தெளிவாகத் தெரிய வரும் என்றும் போலீஸ் அதிகாரி மேலும் கூறினார்.