செய்திகள் :

கேரளத்தில் அதிகம் வசூலித்த திரைப்படமானது துடரும்!

post image

மோகன்லாலின் துடரும் திரைப்படம் கேரளத்தில் அதிக வசூலை ஈட்டியுள்ளது.

இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் நடிகர்கள் மோகன்லால் - ஷோபனா நடிப்பில் உருவான துடரும் திரைப்படம் கடந்த ஏப். 25 ஆம் தேதி திரைக்கு வந்தது.

குடும்பப் பின்னணியில் எமோஷனல் கதையைப் பேசிய இப்படம் மோகன்லாலின் நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் இதுவரை ரூ. 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியுள்ளது.

இதில், கேரளத்தில் மட்டும் இப்படம் ரூ. 90 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாம். இதனால், இதுவரை வெளியான மலையாள திரைப்படங்களிலேயே கேரளத்தில் அதிக வசூலை ஈட்டிய படம் என்கிற சாதனையைப் பெற்றுள்ளது.

முன்னதாக, இடுக்கி வெள்ளப்பெருக்கை மையமாக வைத்து உருவான 2018 திரைப்படமே கேரளத்தில் அதிக வசூலை ஈட்டிய படமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஏஸ் டிரைலர் தேதி!

நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி காலமானார்!

நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி புற்றுநோய் பாதிப்பால் இன்று காலமானார். தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகராக இருந்தவர் சூப்பர்குட் சுப்பிரமணி. (சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்ததா... மேலும் பார்க்க

பிரபல தமிழ் நடிகருக்கு அப்பாவாக நடிக்கும் மோகன்லால்?

பிரபல நடிகருக்கு அப்பாவாக நடிக்க நடிகர் மோகன்லாலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் மோகன்லால் எம்புரான், துடரும் படங்களின் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கிறார். அடுத்த... மேலும் பார்க்க

டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழுவைப் பாராட்டிய சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழுவைப் பாராட்டியுள்ளார்.அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மே.1 ஆம் தேதி வெளியானது.இலங்கையிலிருந்... மேலும் பார்க்க

ஏஸ் டிரைலர் தேதி!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ஏஸ் படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான 'மகாராஜா’ மற்றும் ’விடுதலை - 2ம் பாகம்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் அவருக... மேலும் பார்க்க

இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிஎஸ்ஜி..! மகிழ்ச்சியில் 600 ஊழியர்களுக்கு வெகுமதி!

சாம்பியன்ஸ் லீக்கின் இறுதிப் போட்டிக்கு பிஎஸ்ஜி முன்னேறியதால் அந்த அணியின் 600 ஊழியர்களுக்கும் அதன் தலைவர் வெகுமதியை அறிவித்துள்ளார்.சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் பிஎஸ்ஜி அணி ஆர்செனலை 3-1 என வீழ்த்தி... மேலும் பார்க்க