ஜம்மு: பாகிஸ்தான் தாக்குதலில் 8 வீரர்கள் காயம்
ஜம்முவில் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறியத் தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 8 பேர் காயமடைந்தனர்.
ஜம்முவில் உள்ள சர்வதேச எல்லையில் சனிக்கிழமை பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் 8 எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்கள் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆர்.எஸ். புரா செக்டரில் இந்த சம்பவம் நடந்ததாக அவர்கள் கூறினர்.
இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிஎஸ்ஜி..! மகிழ்ச்சியில் 600 ஊழியர்களுக்கு வெகுமதி!
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள ராணுவ மருத்துவ மையத்திற்கு விரைந்ததாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
ஜம்முவில் 2,000 கி.மீ. நீளமுள்ள சர்வதேச எல்லையை பாதுகாக்கும் பணி பிஎஸ்எஃப் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.