செய்திகள் :

`இந்தியாவின் S-400 அழிக்கப்பட்டுவிட்டதா?’ - மறுத்து விளக்கிய விங் கமாண்டர் வியோமிகா சிங்

post image

இன்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் இந்தியா - பாகிஸ்தான் இடையே உருவாகியுள்ள பதற்ற நிலை குறித்து இந்திய விமானப்படையின் (IAF) விங் கமாண்டர் வியோமிகா சிங் விளக்கினார்...

அவர், "F-17 போர் விமானங்களில் இருந்து ஏவப்பட்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், ஆதம்பூரில் இந்தியாவின் S-400 வான் பாதுகாப்பு அமைப்பை அழித்ததாக பாகிஸ்தான் கூறுவது `தவறானது’. இந்தத் தகவலை இந்தியா முற்றிலுமாக மறுக்கிறது.

பாகிஸ்தான் இராணுவம் இந்தியாவிற்குள் தனது படைகளை முன்னோக்கி நகர்த்துவது தெரிகிறது. இது இந்தப் பதற்றத்தை மேலும் அதிகரிக்கிறது.

நேரலை
நேரலை

இந்திய ராணுவம் தயார் நிலையில் தான் இருக்கிறது. அனைத்து விரோத நடவடிக்கைகளுக்கும் திறம்பட பதிலடி கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தியா இந்தப் பதற்ற நிலையை குறைப்பதில் உறுதியுடன் இருக்கிறது.

பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளில் இருக்கும் மக்கள் மீதும், அந்தப் பகுதிகளின் கட்டமைப்புகள் மீதும் குறிவைக்கின்றன. அந்தத் தாக்குதல்களுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது" என்று பேசியுள்ளார்.

பாகிஸ்தான் அழித்ததாக கூறிய சில விமானப்படை தளங்களின் புகைப்படங்களை நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.

இந்த நேரலையின் வீடியோ இதோ...

இந்தியாவின் எதிர்ப்பை மீறியும் பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் கடனை IMF விடுவித்தது ஏன்? - பின்னணி!

சர்வதேச நாணய நிதியம் (IMF), நேற்று பாகிஸ்தானுக்கு விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ், உடனடியாக 1 பில்லியன் டாலரை கடனாக விடுவித்துள்ளது. இதற்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளது. இந... மேலும் பார்க்க

இந்தியா, பாகிஸ்தானிடம் மாறி மாறிப் பேச்சுவார்த்தை நடத்தும் அமெரிக்கா; ஜெய்சங்கர் சொல்வதென்ன?

உலகில் எந்த மூலை முடுக்கில் சண்டை நடந்தாலும், அதைத் தீர்க்க முயற்சி செய்வது, பேச்சுவார்த்தை நடத்துவது உலக நாடுகளில் பெரிய அண்ணன் என்று செல்லமாக அழைக்கப்படுகிற அமெரிக்காவின் வேலை.இதன் சமீபத்திய உதாரணங்... மேலும் பார்க்க

Operation Sindoor : `தகர்த்தெறியப்பட்ட பயங்கரவாத ஏவுதளங்கள்’ - இந்திய ராணுவம் வெளியிட்ட வீடியோ

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக, மே 7 ஆம் தேதி `ஆபரேஷன் சிந்தூர்’ எனும் துல்லிய தாக்குதலை இந... மேலும் பார்க்க

'காலை 1.40-க்கு பஞ்சாப்பில் தாக்குதல் நடத்த குறிவைத்த பாகிஸ்தான்' - விவரித்த கர்னல் சோபியா குரேஷி

இந்தியா - பாகிஸ்தான் எல்லை பதற்றம் குறித்து இன்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கர்னல் சோபியா குரேஷி பேசுலையில்."பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் மேற்... மேலும் பார்க்க

India - Pakistan: `போரில் யாரும் வெல்ல மாட்டார்கள்; நிறுத்துங்கள்’ - நேபாளத்தில் நடந்த போராட்டம்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்து வரும் மோதலில் இரு தரப்பிலிருந்தும் இழப்புகளும் தாக்குதல்களும் தொடர்ந்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் இரு நாடுகளும் சூழலை கட்டுக்குள் கொ... மேலும் பார்க்க

India - Pakistan : `அவர்கள் சொல்வது அனைத்துமே பொய்; பெரிதாக எடுத்துகொள்ள வேண்டாம்’ - விக்ரம் மிஸ்ரி

தற்போது நிலவி வரும் இந்தியா - பாகிஸ்தான் எல்லை பதற்றம் குறித்து இந்திய மக்களிடம் விளக்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதில் இந்தியாவின் முன்னெடுப... மேலும் பார்க்க