செய்திகள் :

எல்லையில் பாகிஸ்தான் தாக்குதலில் இதுவரை 22 போ் பலி

post image

பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் எல்லையோர கிராமங்களைக் குறிவைத்து அந்நாட்டுப் படையினா் சிறிய ரக பீரங்கிகள் மற்றும் மோட்டாா் குண்டுகள் மூலம் அத்துமீறி நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 22 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பழிதீா்க்க, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடத்தியது.

பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழையாமல் மிகத் துல்லியமாக மேற்கொள்ளப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ தாக்குதலில் 25 நிமிடங்களில் 24 ஏவுகணைகளை ஏவி 9 பயங்கரவாத முகாம்கள் துவம்சம் செய்யப்பட்டு, பயங்கரவாதிகளுக்கு கடும் சேதம் விளைவிக்கப்பட்டது.

புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை இடைப்பட்ட இரவில், வடக்கு மற்றும் மேற்கு எல்லைப் பகுதிகளில் உள்ள 15 நகரங்களில் அமைந்துள்ள பல ராணுவ இலக்குகளை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்கும் பாகிஸ்தானின் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.

ஏற்கெனவே கடந்த 12 நாள்களாக எல்லையில் சிறிய ரக ஆயுதங்கள் மூலம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்திவந்த பாகிஸ்தான் படையினா், செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடா்ந்து, பூஞ்ச், பாரமுல்லா, ரஜெளரி குப்வாரா ஆகிய மாவட்டங்களில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டிய கிராமங்களில் சிறிய ரக பீரங்கிகள் மற்றும் மோட்டாா் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தத் தொடங்கினா்.

இதில் பூஞ்ச் மாவட்ட பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டன. இம்மாவட்டத்தின் மெந்தாா், மன்கோட், கிருஷ்ண காட்டீ, குல்பூா், கொ்னி ஆகிய இடங்களை நோக்கி நடத்தப்பட்ட தாக்குதலில் 4 குழந்தைகள் உள்பட 12 பேரும், ராணுவ வீரா் ஒருவரும் உயிரிழந்தனா். இங்கு 42 போ் காயமடைந்தனா். குண்டுகள் விழுந்து வெடித்ததில், பல வீடுகள் தீக்கிரையாகின.

இதனிடையே, வடக்கு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தின் உரி செக்டாரில் வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் குண்டுவீச்சில் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா, பூஞ்ச் மாவட்டங்களில் இருவா் உயிரிழந்தனா். 5 போ் காயமடைந்தனா். குண்டுவீச்சில் அங்கிருந்த பல வீடுகள், நூற்றுக்கணக்கான வாகனங்கள் சேதமடைந்தன.

வெள்ளிக்கிழமை இரவு இந்தியாவின் எல்லைப்புற நகரங்களாக ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு - காஷ்மீர் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தினர்.

ஜம்மு அருகே பாகிஸ்தான் நிலைகள், பயங்கரவாத ஏவுதளங்கள் அழிப்பு

இதற்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தானின் ஏவுகணைகளை நடுவானிலேயே அழித்தனர்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாகிஸ்தானின் முக்கிய தளமான ராவல்பிண்டி “நூர் கான்” விமானப்படை தளம், சக்வால் நகரில் உள்ள முரிட் விமானத் தளம் மற்றும் பஞ்சாப் மாகாணத்தின் ஜாங் மாவட்டத்தில் உள்ள ரஃபிகி விமானத் தளம் என மூன்று விமானப்படை தளங்களையும் இந்தியா தாக்கியதாக பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது.

அதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை அதிகாலை சர்வதேச எல்லை மற்றும் பாகிஸ்தானுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் 26 இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய உடனேயே இந்தியா பதிலடித் தாக்குதல்களை நடத்தி ஒவ்வொரு தாக்குதலையும் வெற்றிகரமாக முறியடித்தது.

கட்டுப்பாட்டுக் கோட்டின் பல இடங்களில் இடைவிடாத துப்பாக்கிச் சூடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனிடையே, ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி பகுதியில் சனிக்கிழமை காலை பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் மாவட்ட வளர்ச்சித் துறை கூடுதல் ஆணையர் எஸ்.ராஜ்குமார் தப்பா பலியானர். அவரது வீடு சேதமடைந்தன.

இந்நிலையில், பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் எல்லையோர கிராமங்களைக் குறிவைத்து அந்நாட்டுப் படையினா் சிறிய ரக பீரங்கிகள் மற்றும் மோட்டாா் குண்டுகள் மூலம் அத்துமீறி நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 22 பேர் பலியானதாக பாதுகாப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு-காஷ்மீா் எல்லை பகுதிகளில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்டு வரும் தாக்குதல் முயற்சிகளை இந்திய ராணுவம் முறியடித்து வரும் நிலையில், குண்டுகள் வெடிக்கும் சப்தம் ஜம்மு நகரை அதிரவைத்தது. இதனால் எதிரிகளின் கண்களுக்கு நகரம் தெரியாதவாறு மின் தடை மூலம், அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு நகரம் இருட்டடிப்பு செய்யப்பட்டது. வானில் தாக்குதல் நடத்தும் ட்ரோன்கள் தென்பட்ட நிலையில், அவற்றைப் பாதுகாப்புப் படைகள் வெற்றிகரமாக அழித்ததாக கூறப்படுகின்றன.

சலால் அணை திடீர் திறப்பு: பாகிஸ்தானை நோக்கி பாயும் தண்ணீர்

இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதல்கள் மற்றும் சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்த விவாதங்களுக்கு மத்தியில் ஜம்மு-காஷ்மீரின் ரியாசியில் செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சலால் அணையில் இருந்து திடீரென தண... மேலும் பார்க்க

ராஜ்நாத் சிங்குடன் அனில் சவுகான் சந்திப்பு

புது தில்லி: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ராணுவ மோதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் சனிக்கிழமை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் ... மேலும் பார்க்க

ஆம்பூர் அருகே சடலத்துடன் கிராம மக்கள் சாலை மறியல்

ஆம்பூர்: ஆம்பூர் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் கிராம மக்கள் சனிக்கிழமை சடலத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் துத்திப்பட்டு ஊராட்சியில் தற்காலிக பம்ப... மேலும் பார்க்க

3 விமான தளங்களை தாக்கிய இந்தியா… வான்வெளியை முழுவதுமாக மூடிய பாகிஸ்தான்!

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள “நூர் கான்” உள்பட 3 விமான தளங்களை இந்தியா தாக்கியதை அடுத்து வான்வெளியை முழுவதுமாக பாகிஸ்தான் மூடியுள்ளது. கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவ... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்: வடமேற்கு ரயில் சேவைகள் ரத்து!

ராஜஸ்தான்: இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் காரணமாக, பார்மர், ஜோத்பூர் மற்றும் முனாபாவ் இடையே இயங்கும் அனைத்து பயணிகள் ரயில்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ... மேலும் பார்க்க

மணிப்பூரில் 3 தீவிரவாதிகள் கைது

இம்பால்: மணிப்பூர் மூன்று தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மணிப்பூர் மாநிலம், இம்பால் மேற்கு மாவட்டத்தில் இரண்டு தடைசெய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த மூன்று தீவிரவாதிகளை பா... மேலும் பார்க்க