செய்திகள் :

திமிங்கலத்தின் சிறுநீரால் கடலுக்கு இவ்வளவு நன்மைகளா? - ஆராய்ச்சியாளர்களின் ஆச்சர்ய தகவல்கள்!

post image

திமிங்கலத்தின் சிறுநீரால் கடல் நீருக்கு அதிகமான நன்மைகள் கிடைப்பதாகவும், இதனால் கடல் வாழ் உயிரினங்களின் உணவு சங்கிலி பாதுகாக்கப்படுவதாகவும் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பூமியின் மேற்பரப்பு சுமார் 75% நீரால் சூழப்பட்டுள்ளது. இதில் பெரும்பகுதி பெருங்கடல்கள், மீதம் உள்ளவை ஏரிகள் ஆறுகள் பணிப்பாறைகள் நிலத்தடிநீர்கள் என உள்ளன.

பூமியின் நீரில் சுமார் 96.5% கடல் நீராக உள்ளன. இந்த கடல் நீரை பாதுகாக்க, அதில் வாழும் திமிங்கலம் முக்கிய பங்காக உள்ளது என்பது பலருக்கு தெரியாது. திமிங்கலத்தின் எச்சங்கள் மற்றும் சிறுநீர் கடலுக்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் பல நன்மைகள் கொடுப்பதாக சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திமிங்கலத்தின் சிறுநீரால் கடலுக்கு நன்மையா? என்று பலரும் யோசிக்கலாம்.. இந்த பதிவில் இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

Whale

ஊட்டச்சத்து ஆதாரமாக திமிங்கலத்தின் சிறுநீர்

கடலின் பிரமாண்ட உயிரினமாக காணப்படும் திமிங்கலங்கள், கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளில் இன்றியமையாத பங்கை வகிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, திமிங்கலத்தின் சிறுநீரில் நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் அதிக அளவில் உள்ளது.

இதுதான் கடலில் வாழும் தாவரமான தாவர நுண்ணுயிர் மிதவை (phytoplankton) வளர மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்த தாவரம் தான் கடலில் ஆக்சிஜனை அதிக அளவில் உற்பத்தி செய்து சிறிய மற்றும் பெரிய மீன்களின் உணவாகவும் உள்ளது.

திமிங்கலங்கள் கடலில் சிறுநீர் கழிக்கும் போது அதில் உள்ள நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் கடலில் பரவி பைட்டோபிளாங்க்டன் செழிப்பாக வளர உதவுகின்றன. இந்த செயல்முறையால் கடல் வாழ் உயிரினங்கள் ஒன்றோடொன்று இணைந்திருப்பதோடு, கடலின் உணவு சங்கிலியும் சமநிலையில் தொடர முடிகிறது.

கடல் முழுவதும் ஊட்டச்சத்து கொடுக்கும் திமிங்கலம்

ஆழ்கடலில் வசிக்கும் திமிங்கலங்கள் சுவாசிக்கவும், கழிவுகளை வெளியேற்றவும் கடலின் மேற்பரப்புக்கு வருகின்றன. இதனால் ஆழ்கடலில் இருக்கும் சில ஊட்டசத்துக்கள் கடலின் எல்லா பகுதிக்கும் பரவுவதற்கு திமிங்கலங்கள் முக்கிய காரணமாக உள்ளன.

இதனால் கடலில் உள்ள கெட்ட நைட்ரஜன் அளவில் மாறுதல் ஏற்படுவதுடன் கடல் வாழ் தாவரமான பைட்டோபிளாங்க்டன் வளர்ச்சியும் செழிப்பாகிறது. அதுமட்டுமில்லாமல் கடல் உணவுச் சங்கிலிக்கும் பயனை அளிக்கிறது.

ஆழ்கடலில் வசிக்கும் திமிங்கலங்கள் சுவாசிக்கவும் , கழிவுகளை வெளியேற்றவும் கடலின் மேற்பரப்புக்கு வருவதை ஆராய்ச்சியாளர்கள் திமிங்கல பம்ப் (whale pump) எனக் கூறுகின்றனர்.

கார்பன் சுழற்சி

கடலில் திமிங்கலங்களின் தாக்கம் ஊட்டச்சத்து சுழற்சியைத் தாண்டி கார்பனை பிரித்தெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. கடல்வாழ் தாவரமான பைட்டோபிளாங்க்டன் கடலில் உள்ள கார்பன் டை ஆக்ஸ்ஸைடை நீக்க உதவுகின்றது, சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகளின்படி திமிங்கலங்களின் உதவியுடன் ஆண்டுதோறும் 18,180 டன் கார்பன், கடலில் இருந்து பிரித்தெடுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்துக்களை எடுத்து செல்லும் திமிங்கலங்கள்

திமிங்கலங்கள் நிலையாக ஒரு பகுதியில் இருப்பதில்லை, கடலின் பல்வேறு பகுதிகளுக்கும் நீந்தி செல்கின்றன. இதனை கடல் சார் நிபுணர்கள், ”திமிங்கல கன்வேயர் பெல்ட்” என கூறுகின்றனர்.

திமிங்கல கன்வேயர் பெல்ட் (Whale Conveyor Belt) என்பது திமிங்கலங்கள் கடல் நீரில் ஊட்டச்சத்துக்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதைக் குறிப்பதாகும்.

உதாரணமாக, சாம்பல் திமிங்கலங்கள் குளிர்காலத்தில் வடக்கு பசிபிக் பகுதிக்கு செல்கின்றன. கோடையில் கலிபோர்னியா கடற்கரையில் கூடுகின்றன. இதனால் கார்பன் மற்றும் நைட்ரஜன் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கடலின் பல்வேறு பகுதிகளுக்கும் எடுத்து செல்ல முடிகிறது. இதற்கு முக்கிய காரணியாக திமிங்கலங்களின் இடப்பெயர்ச்சி உள்ளது.

உணவு சங்கிலியில் பங்கு

திமிங்கலங்களின் சிறுநீர், கடலில் ஊட்டசத்துக்களை அதிகரிப்பதோடு கடலில் உள்ள பல உயிரினங்கள் வாழவும் இனப்பெருக்கம் செய்யவும் உதவுகிறது.

ஏற்கனவே சொன்னது போல திமிங்கலத்தின் சிறுநீரில் நைட்ரஜன், பாஸ்பரஸ் அதிக அளவில் உள்ளது. இதனால் தாவர நுண்ணுயிர் மிதவை செழிப்பாக வளர்கிறது. இந்த தாவர நுண்ணுயிர் மிதவை கடலில் அதிக அளவில் இருக்கிறது. அதனை உண்பதற்கு சிறிய மீன்கள் வருகின்றன. அவற்றை உண்ண அதே பகுதிக்கு பெரிய மீன்களும் வருகின்றன, இதனால் ஒரு ஆரோக்கியமான உணவு சங்கிலி தொடர் உருவாக திமிங்கலங்களின் எச்சம் மற்றும் சிறுநீர் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மனித நடவடிக்கை- திமிங்கலங்கள் பாதிப்பு

மனித நடவடிக்கைகளால் திமிங்கலங்கள் பல்வேறு வழிகளில் பாதிக்கப்படுதாக ஆராய்ச்சியார்கள் கூறுகின்றனர். குறிப்பாக திமிங்கல வேட்டை, கடல் மாசுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் கடல் போக்குவரத்தை மேம்படுத்துவது ஆகியவை திமிங்கலங்களின் வாழ்விடத்தையும், இனப்பெருக்கத்தையும், உடல்நலத்தையும் பாதித்து, அவற்றின் எண்ணிக்கையை வெகுவாக குறைப்பதாக கூறுகின்றனர்.

மனித இனம் நடத்திய திமிங்கல வேட்டையில் 1900 மற்றும் 1999 க்கு இடையில், 2.9 மில்லியன் திமிங்கலங்கள் கொல்லப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுவதாக Scientific American வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல நாடுகள் தற்போது திமிங்கல வேட்டைக்கு தடை விதித்திருந்தாலும் மறைமுகமாக இன்னும் வேட்டை நடப்பதாக கூறப்பட்டுள்ளது.

அதே சமயம் திமிங்கலங்கள், மீன்பிடி வலைகளில் சிக்கி காயமடைவதாகவும், பெரிய கப்பல்கள் மோதுவதால் திமிங்கலங்களுக்கு கடுமையான காயங்கள் ஏற்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் கப்பல்களின் இரைச்சல் திமிங்கலங்களின் தகவல் தொடர்பு மற்றும் வழிநடத்தலுக்கு பெரும் தடையாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.

அதே போல் கடலில் கொட்டப்படும் இரசாயனங்கள் திமிங்கலங்களின் உடலில் குவிந்து இனப்பெருக்கம் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிக அளவில் பாதிப்பதுடன் காலநிலை மாற்றத்தால் கடல் வெப்பநிலை உயர்வு, கடல் அமிலமயமாதல் பனிப்பாறைகள் கரைவதால திமிங்கலங்களின் உணவு ஆதாரங்களையும் வாழ்விடங்களையும் இழப்பதாகவும் கூறுகின்றனர்.

திமிங்கலங்களின் பாதுகாப்பு

கடலின் முக்கிய உயிரினமாக இருக்கும் இந்த திமிங்கலங்களை பாதுகாக்க (International Whaling Commission - IWC) திமிங்கல பாதுகாப்பு ஆணையம் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் அருகே உள்ள இம்பிங்டனில்1946 இல் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது 88 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது. இந்தியாவும் 1981 முதல் இந்த ஆணையத்தில் உறுப்பினராக உள்ளது

IWC வணிகரீதியான திமிங்கல வேட்டைக்கு தடை விதித்திருந்தாலும், சில நாடுகள் இந்த தடையை ஏற்காமல் தொடர்ந்து திமிங்கல வேட்டையில் களமிறங்கியுள்ளது. திமிங்கலங்கள் எதிர்கொள்ளும் புதிய அச்சுறுத்தல்களான கடல் மாசுபாடு, கப்பல் போக்குவரத்து மற்றும் காலநிலை மாற்றம் போன்றவற்றைச் சமாளிப்பதில் IWC தொடர்ந்து சவால்களை எதிர்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. அதே சமயம் திமிங்கலங்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச முயற்சிகளின் ஒரு முக்கிய அமைப்பாக IWC உள்ளது.

தற்போதைய ஆராய்ச்சி முடிவில் திமிங்கலங்களுக்கும் கடலுக்கும் உள்ள உணவு சங்கிலி தொடர்பை பல ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து, கூறிவருகின்றனர். ஆனால் கடல் சூழலியலுக்கு திமிங்கலங்களின் பங்களிப்புகளை முழுமையாகப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகள் இன்னும் விரிவான ஆய்வுகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

Mudumalai: 'அண்ணன பாத்தியா...' - குழந்தையாக மாறிய கும்கி யானை; கொட்டும் மழையில் குதூகலம்!

ஆசியாவின் மிகப் பழமையான மற்றும் சிறப்பு வாய்ந்த வளர்ப்பு யானை முகாம்களில் ஒன்றாக இருக்கிறது நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம்.நூற்றாண்டுகளைக் கடந்து இயங்கி வரும் இந... மேலும் பார்க்க

ஊட்டிக்குள் முதல் முறையாக நுழைந்த யானை; குழப்பத்தில் தடுமாறும் வனத்துறை! - என்ன நடக்கிறது?

ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம். வளர்ச்சி என்கிற பெயரில் அரசு மற்றும் தனியார் தரப்பில் 200 ஆண்டுகளாக நீலகிரியில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட... மேலும் பார்க்க

Marina Beach: நீலக் கொடி மெரினா திட்டத்தின் கீழ் மூங்கில் நிழற்குடைகள், நாற்காலிகள் | Photo Album

``மெரினா போராட்டத்தைப் பார்த்த பிறகுதான் புரிந்தது.." -ஜல்லிக்கட்டில் சாதிக்கும் சென்னை வீரா பாய்ஸ்Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2... மேலும் பார்க்க

விலை வீழ்ச்சியால்‌ டன் கணக்கில் நீரோடையில் கொட்டப்படும் ஊட்டி கேரட்; பாதிப்பில் காட்டு மாடுகள்!

மலை காய்கறி உற்பத்தியில் சிறந்து விளங்கும் மலை மாவட்டமான நீலகிரியில் கேரட் பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உயர் வீரிய ரக கேரட் விதைகளையே பெ... மேலும் பார்க்க