India Pakistan : `பாகிஸ்தான் ராணுவத்தின் மூன்று விமானத் தளங்களில் இந்தியா தாக்குதல்?’ - பிபிசி தகவல்
இந்தியா - பாகிஸ்தான் எல்லைகளில் நேற்று முன்தினம் முதல் இரு நாடுகளும் தொடர்ந்து மாறி மாறி தாக்குதல் மற்றும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றன.
இது தொடர்பாக, பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்தியின்படி,
பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் இந்தியா மீது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். "இந்தியா மூன்று பாகிஸ்தான் ராணுவ விமானத் தளங்களில் ஏவுகணைகளை ஏவியது.” எனக் கூறியுள்ளார். ஆனால், இது குறித்து இந்தியா இதுவரையில் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.

பாகிஸ்தான் தொலைக்காட்சி நேரலை ஒன்றில், பாகிஸ்தான் நாட்டின் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீஃப் சவுத்ரி, "பெரும்பாலான இந்திய ஏவுகணைகளை பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்பு தடுத்து நிறுத்திய போதிலும், சில ஏவுகணைகள் பாகிஸ்தான் எல்லைக்குள் வந்துவிட்டன.
நாட்டின் படைகள் தயாராகவே உள்ளன. இது ஒரு கோழைத்தனமான தாக்குதல். எங்களது பதிலடிக்காக காத்திருங்கள்" என்று பேசியுள்ளார்.
இந்தியா மீது பதிலடி தாக்குதல் நடத்த பாகிஸ்தான், 'ஆபரேஷன் பனியன் மார்சஸ் (Operation Bunyan Marsus)' என்று பெயரிட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்புத் துறை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் தனது வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.