செய்திகள் :

போர்ப் பதற்றம்: உயரதிகாரிகளின் விடுமுறையை ரத்து செய்தது ஒடிசா அரசு!

post image

இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதல் காரணமாக முக்கிய பணிகளில் இருக்கும் உயரதிகாரிகளின் விடுமுறையை ஒடிசா அரசு ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பொது நிர்வாகம், பொது குறை தீர்க்கும் துறை, வருவாய் கோட்ட ஆணையர்கள், மாவட்ட ஆட்சியர், மாவட்ட மேலாளர்கள் போன்றோருக்கு இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு சார்பில் கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், நாட்டின் மேற்குப் பகுதியில் நடந்துவரும் போர்ப் பதற்றம் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முக்கிய பணியில் இருப்பவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட அனைத்து விடுமுறைகளும் ரத்து செய்யப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

தற்போது விடுப்பில் உள்ள அனைத்து வருவாய் கோட்ட ஆணையர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களும் தலைமையகத்திற்குத் திரும்பி உடனடியாக பணியில் சேருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்தக் காலகட்டத்தில் எந்த அதிகாரிக்கும் இனி விடுமுறை வழங்கப்படாது என்றும், நிலைமையை அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் பொது நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உ.பி.: கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுவனின் சடலம் வயலில் இருந்து மீட்பு

ஹத்ராஸில் கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் 7 வயது சிறுவனின் சடலம் வயலில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஹத்ராஸில் தினை வயல் ஒன்றில் இருந்து 7 வயது சி... மேலும் பார்க்க

தில்லியில் 60 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து!

தில்லி விமான நிலையத்தில் 60 உள்நாட்டு விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து, ஸ்ரீநகர் மற்றும் சண்டிகர் உ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவர் முர்முவின் சபரிமலை பயணம் ரத்து

இந்தியா-பாகிஸ்தான் போர்ப் பதற்றத்தால் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் சபரிமலை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மே 19ஆம் தேதி சாமி தரிசனம் ச... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் போர் மூளும்! ஓராண்டுக்கு முன்பே கணித்திருந்தாரா ஜோதிடர்?

இந்தியா - பாகிஸ்தான் இடையே கடுமையான போர் ஏற்படும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்திருப்பதாக வெளியாகும் சமூகவலைதளப் பதிவுகள் திடீரென கவனம் பெற்றிருக்கின்றன. ஜம்மு-காஷ்மீ... மேலும் பார்க்க

வதந்திகளை நம்ப வேண்டாம்.. மக்களை எச்சரிக்கும் முதல்வர் மான்!

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்துவரும் பதட்டங்களுக்கு மத்தியில் மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களுடன் பே... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் மோதல்: பிரதமர் மோடி அடுத்தடுத்து ஆலோசனை

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் கடுமையான மோதல் நடந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி முப்படைத் தளபதிகள், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். நேற்று பிரத... மேலும் பார்க்க