சிந்து நதி நீர் உடன்பாடு: தற்போதைய நிலையே தொடரும்! - மத்திய அரசு
வினா - விடை வங்கி... பாளையக்காரர்கள் புரட்சி! - 2
1. காளையார்கோவில் அரண்மணை தாக்கப்பட்ட ஆண்டு?
(a) 1772
(b) 1773
(c) 1775
(d) 1780
2. முத்துவடுகநாதர் எந்த போரில் கொல்லப்பட்டார்?
(a) நாகலாபுரம் போர்
(b) களக்காடு போர்
(c) காளையார்கோவில் போர்
(d) மைசூர் போர்
3. தனது மகளோடு தப்பிச்சென்ற வேலுநாச்சியாருக்கு பாதுகாப்பளித்தவர் யார்?
(a) கட்டபொம்மன்
(b) தீரன் சின்னமலை
(c) குயிலி
(d) கோபால நாயக்கர்
4. கோபால நாயக்கரின் பாதுகாப்பில் வேலுநாச்சியார் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?
(a) 5 ஆண்டுகள்
(b) 8 ஆண்டுகள்
(c) 10 ஆண்டுகள்
(d) மேற்கூறிய எதுவுமில்லை
5. விருப்பாட்சியின் பாளையக்காரர் யார்?
(a) கோபால நாயக்கர்
(b) சிவகிரி
(c) சின்ன மருது
(d) தீரன் சின்னமலை
6. இந்திய நாட்டில் பிரிட்டிஷ் காலனியாதிக்க அதிகாரத்தை எதிர்த்த முதல் பெண் ஆட்சியாளர் யார்?
(a) குயிலி
(b) வேலுநாச்சியார்
(c) உடையாள்
(d) ஜான்சி ராணி
7. வேலுநாச்சியாரின் நம்பிக்கைக்குரிய தோழி யார்?
(a) ஜான்சி ராணி
(b) குயிலி
(c) உடையாள்
(d) மேற்கூறிய யாருமில்லை
8. தனக்குத்தானே நெருப்பு வைத்துக்கொண்டு பிரிட்டிஷாரின் ஆயுதக் கிடங்கை அழித்தவர் யார்?
(a) வேலுநாச்சியார்
(b) ஒண்டிவீரன்
(c) குயிலி
(d) மேற்கூறிய யாருமில்லை
9. பாஞ்சாலக்குறிச்சியின் பாளையக்காரராக கட்டபொம்மன் அவரது எத்தனையாவது வயதில் பொறுப்பேற்றார்?
(a) 25 வயதில்
(b) 27 வயதில்
(c) 29 வயதில்
(d) 30 வயதில்
10. 1798 ஆண்டு கட்டபொம்மனிடமிருந்து ஆங்கிலேயர்கள் வசூலிக்க வேண்டிய நிலவரி நிலுவை எவ்வளவு?
(a) 3300 பகோடாக்கள்
(b) 3310 பகோடாக்கள்
(c) 3320 பகோடாக்கள்
(d) 3350 பகோடாக்கள்
11. இராமநாதபுரத்தில் தன்னை சந்திக்க ஆட்சியர் ஜாக்சன் கட்டபொம்மனுக்கு எப்போது ஆணை பிறப்பித்தார்?
(a) ஆகஸ்ட் 10, 1798
(b) ஆகஸ்ட் 15, 1798
(c) ஆகஸ்ட் 18, 1798
(d) ஆகஸ்ட் 20, 1798
12. பின்வருவனவற்றுள் சரியானவை எவை?
1. கட்டபொம்மனிடமிருந்து வரி நிலுவையை வசூலிக்க இராணுவத்தை அனுப்ப மதராஸ் அரசாங்கம் ஜாக்சனுக்கு அனுமதி அளித்தது.
2. அந்த இராணுவத்தின் உதவியோடு கட்டபொம்மனிடம் வரி நிலுவை வசூலிக்கப்பட்டது.
(a) 1 சரி
(b) 2 சரி
(c) 1, 2 சரி
(d) 1, 2 தவறு
13. கட்டபொம்மன் ஆட்சியர் ஜாக்சனை இராமநாதபுரத்தில் சந்தித்த ஆண்டு?
(a) செப்டம்பர் 19, 1798
(b) செப்டம்பர் 21, 1798
(c) செப்டம்பர் 22, 1798
(d) செப்டம்பர் 25, 1798
14. பின்வருவனவற்றுள் சரியானவை எவை?
1. ஆட்சியர் ஜாக்சனை சந்தித்தபோது, கட்டபொம்மன் அவமதிக்கப்பட்டார்.
2. கட்டபொம்மன் மற்றும் அவரது அமைச்சர் சிவசுப்பிரமணியனார் இருவரும் சிறைபிடிக்கப் பட்டனர்.
(a) 1 சரி
(b) 2 சரி
(c) 1, 2 சரி
(d) 1, 2 தவறு
15. ஆட்சியர் ஜாக்சனை கட்டபொம்மன் சந்தித்தபோது கோட்டையிலிருந்து தப்பிப்பதற்கு அவருக்கு உதவியவர் யார்?
(a) மருது சகோதரர்கள்
(b) கோபால நாயக்கர்
(c) ஊமைத்துரை
(d) மேற்கூறிய யாருமில்லை
16. கட்டபொம்மன் அவமதிக்கப்பட்டது தொடர்பாக மதராஸ் ஆட்சிக்குழு எடுத்த நடவடிக்கைகள் என்ன?
1. ஆட்சிக்குழு முன்பு ஆஜராகும்படி கட்டபொம்மனுக்கு ஆணை விடுத்தது
2. ஆட்சியர் ஜாக்சன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்
3. சிவசுப்பிரமணியனார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்
(a) 1 மற்றும் 2 சரி
(b) 1 மட்டும் சரி
(c) 2 மற்றும் 3 சரி
(d) அனைத்தும் சரி
17. மதராஸ் ஆட்சிக்குழு முன்பு கட்டபொம்மன் ஆஜரான நாள்?
(a) டிசம்பர் 10, 1798
(b) டிசம்பர் 12, 1798
(c) டிசம்பர் 13, 1798
(d) டிசம்பர் 15, 1798
18. மதராஸ் ஆட்சிக்குழுவை கட்டபொம்மன் சந்தித்த பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
1. கட்டபொம்மன் குற்றவாளி என குழு முடிவு செய்தது.
2. ஆட்சியர் ஜாக்சனுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது
(a) 1 சரி
(b) 2 சரி
(c) 1, 2 சரி
(d) 1, 2 தவறு
19. ஆட்சியர் ஜாக்சனுக்குப் பதிலாக புதிதாக நியமிக்கப்பட்ட ஆட்சியர் யார்?
(a) எஸ்.ஆர்.லூஷிங்டன்
(b) கில்லெஸ்பி
(c) வில்லியம் பெண்டிக்
(d) மேற்கூறிய யாருமில்லை
20. திருச்சிராப்பள்ளி அறிக்கையை தயாரித்தது யார்?
(a) கட்டபொம்மன்
(b) வேலுநாச்சியார்
(c) மருது சகோதரர்கள்
(d) ஹைதர் அலி
21. கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைத் தாக்கியவர் யார்?
(a) கர்னல் ஹெரான்
(b) கில்லெஸ்பி
(c) வெல்லெஸ்லி
(d) மேஜர் பானெர்மென்
22. கட்டபொம்மனை சரணடையக் கூறி மேஜர் பானெர்மென் யாரை தூது அனுப்பினார்?
(a) ஊமைத்துரை
(b) சிவசுப்பிரமணியனார்
(c) இராமலிங்கர்
(d) மேற்கூறிய யாருமில்லை
23. ஆங்கிலேயர்களிடமிருந்து கட்டபொம்மன் தப்பிச் சென்ற இடம்?
(a) புதுக்கோட்டை
(b) சிவகிரி
(c) இராமநாதபுரம்
(d) மேற்கூறிய எதுவுமில்லை
24. பின்வருவனவற்றுள் சரியானவை எவை?
1. எட்டையபுரம் மற்றும் புதுக்கோட்டை அரசர்கள் கட்டபொம்மனுக்கு துரோகம் செய்தனர்
2. கட்டபொம்மன் நாகலாபுரத்தில் தூக்கிலிடப்பட்டார்.
(a) 1 சரி
(b) 2 சரி
(c) 1, 2 சரி
(d) 1, 2 தவறு
25. சிவசுப்பிரமணியனார் தூக்கிலிடப்பட்ட இடம் எது?
(a) சங்ககிரி
(b) கயத்தாறு
(c) நாகலாபுரம்
(d) பாளையங்கோட்டை
விடைகள்
1. (a) 1772
2. (c) காளையார்கோவில் போர்
3. (d) கோபால நாயக்கர்
4. (b) 8 ஆண்டுகள்
5. (a) கோபால நாயக்கர்
6. (b) வேலுநாச்சியார்
7. (b) குயிலி
8. (c) குயிலி
9. (d) 30 வயதில்
10. (b) 3310 பகோடாக்கள்
11. (c) ஆகஸ்ட் 18, 1798
12. (d) 1, 2 தவறு
13. (a) செப்டம்பர் 19, 1798
14. (a) 1 சரி
15. (c) ஊமைத்துரை
16. (d) அனைத்தும் சரி
17. (d) டிசம்பர் 15, 1798
18. (d) 1, 2 தவறு
19. (a) எஸ்.ஆர்.லூஷிங்டன்
20. (c) மருது சகோதரர்கள்
21. (d) மேஜர் பானெர்மென்
22. (c) இராமலிங்கர்
23. (a) புதுக்கோட்டை
24. (a) 1 சரி
25. (c) நாகலாபுரம்