அயாத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த யோகி ஆதித்யநாத்
குடியரசுத் தலைவர் முர்முவின் சபரிமலை பயணம் ரத்து
இந்தியா-பாகிஸ்தான் போர்ப் பதற்றத்தால் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் சபரிமலை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மே 19ஆம் தேதி சாமி தரிசனம் செய்ய திட்டமிட்ருந்தார். திட்டத்தின் படி, குடியரசுத் தலைவர் முர்மு கேரள மாநிலம், நிலக்கல் ஹெலிபேடில் தரையிறங்கி, பின்னர் பம்பாவிலிருந்து சபரிமலைக்கு மலையேற்றப் பாதையில் ஏற இருந்தார்.
இந்தியா - பாகிஸ்தான் மோதல்: பிரதமர் மோடி அடுத்தடுத்து ஆலோசனை
இதையொட்டி திருவிதாங்கூர் தேவசம் வாரியம் சன்னிதானத்தில் உள்ள அதன் அலுவலகத்தில் இரண்டு அறைகளை முர்முவின் பயன்பாட்டிற்காக புதுப்பித்திருந்தது. மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஏப்ரல் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் பொது தரிசனத்திற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது குடியரசுத் தலைவரின் வருகை ரத்து செய்யப்பட்டதால் இந்த நாள்களில் பக்தர்களின் பொது தரிசனத்திற்கு மீண்டும் அனுமதி வங்கப்பட்டிருக்கிறது.