உ.பி.: கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுவனின் சடலம் வயலில் இருந்து மீட்பு
பாக்ஸிங் பயிற்சியில் துஷாரா விஜயன்: எந்தப் படத்திற்காக?
நடிகை துஷாரா விஜயன் பாக்ஸிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிற விடியோக்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
பா. இரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் மிகப்பெரிய புகழினைப் பெற்றார்.
இந்தப் படத்துக்குப் பிறகு தனுஷுடன் ராயன், ரஜினியுடன் வேட்டையன் படங்களில் நடித்திருந்தார்.
சமீபத்தில் விக்ரமுடன் வீர தீர சூரன் படத்திலும் சிறப்பாக நடித்திருந்தார்.
ராயன், வீர தீர சூரன் படங்களில் துஷாரா விஜயனின் ஆக்ஷன் காட்சிகளுக்கு பாராட்டும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
உடல்நலத்திலும் உடற்பயிற்சியில் அக்கறைக் கொண்ட துஷாரா விஜயன் சமீப காலமாக பாக்ஸிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
அடுத்த படம் குறித்த அப்டேட் எதுவும் வெளியாகாததால் இந்தப் பயிற்சிகள் எந்தப் படத்துக்காக என ரசிகர்கள் குழம்பி வருகிறார்கள்.
புதிய ஆக்ஷன் படமா அல்லது சார்பட்டா பரம்பரை 2 படத்திற்காகவா என துஷாரா விஜயனின் இந்தப் பயிற்சிகள் பல யூகங்களை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.