KKR vs CSK : 'ஒரு வழியா ஜெயிச்சிட்டோம் மாறா!' - எப்படி வென்றது சிஎஸ்கே?
Maaman: "முதல் காட்சியில் கடவுளே அஜித்தே... அந்தச் சிறுவன் வேற யாரும் இல்ல"- நடிகர் சூரி கலகல
வெற்றிமாறனின் `விடுதலை' படத்தில் கதை நாயகனாகச் சூரிக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து, `கொட்டுக்காளி', `கருடன்' எனத் தொடர்ந்து ஹிட் கொடுத்தார் நடிகர் சூரி.
இதையடுத்து பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி நடித்த 'மாமன்' திரைப்படம் வரும் மே 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாகக் காத்திருக்கிறது.
இயக்குநர் பாண்டியராஜி உதவி இயக்குநராக இருந்தவர் பிரசாந்த் பாண்டிராஜ். தாய்மாமனின் கதையாக உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி குடும்பங்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இதன் வெளியீட்டையொட்டி இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றிருந்தது.

இவ்விழாவில் பேசிய நடிகர் சூரி, "இந்தப் படத்தின் கதையைக் கேட்டு வெற்றிமாறன் அண்ணன் கிட்டச் சொன்னேன். அவர் சில விஷயங்களைச் சேர்க்கச் சொன்னார்.
அதை இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜிடம் சொன்னேன். நானும் பல விஷயங்களைச் சொன்னேன். 'இது எல்லா குடும்பங்களிலும் நடக்கும் கதை, என்னோட குடும்பத்திலும் அப்படித்தான் இருக்கிறது' என்று சொன்னார். இப்படி எல்லா குடும்பங்களிலும் நடக்கும் கதைதான் இது.
கடவுளே அஜித்தே...
இந்தப் படத்தில் அந்தச் சிறுவன் கதாபாத்திரம்தான் முக்கியமான கதாபாத்திரம். பல மாதங்களாக அந்தச் சிறுவன் கதாபாத்திரத்திற்குச் சரியான ஆளைத் தேடி அலைந்தோம்.
நானும் பல போட்டோக்களை அனுப்பினேன். 'பார்த்துக்கலாம்...' என்று இயக்குநர் சொல்லிக் கொண்டே இருந்தார். படத்தின் முதல் காட்சியை எடுத்தபோது 'கடவுளே....' என்று சொன்னவுடன், யாரோ ஒருவர் 'அஜித்தே...' என்று சொன்னார். மீண்டும் மீண்டும் அந்தக் குரல் கேட்டது. அப்போதுதான் அந்தச் சிறுவன்தான் அது எனக் கண்டுபிடித்தேன்.

அந்தப் பையனிடம் 'இயக்குநர் எங்க?' எனக் கேட்டேன். அதற்கு அவன் 'அப்பா இங்கதான் இருக்கார்' என்றார். பிறகுதான் தெரியும் இயக்குநரோட மகன்தான் அந்தப் பையன் என்று.
முன்னாடியே தன் மகனையே அந்தக் கதாபாத்திரத்திற்குத் தேர்வு செய்துவிட்டு, எங்களையெல்லாம் அந்தக் கதாப்பத்திரத்திற்குச் சரியான ஆளைத் தேட வைத்துக் கொண்டிருந்தார் இயக்குநர்.
அந்தப் பையன், அப்பா எந்தப் பெண்ணிடமும் பேசுகிறாரா என்று கண்காணித்துக் கொண்டே இருந்தார். நடிகை ஸ்வசிகாவை ஒரு சீன்ல கட்டிப்பிடித்துக் காட்டினார் இயக்குநர். அதைப் பார்த்து அவர் மகன் அம்மாவிடம் சொல்லி சேட்டைகள் செய்துகொண்டிருந்தார்.
தாய்மாமன், எல்லார் குடும்பத்திலும் நடக்கும் கதை இது. தியேட்டர்ல படம் பார்க்க மாட்டீங்க, உங்களோட குடும்பத்தைத்தான் பார்ப்பீங்க.
இந்தப் படம் மூலம் எங்க குடும்பத்தில் இருக்கும் ஒருவர் மாறுவார் என்று நினைக்கிறேன். இப்படம் மூலம் அது நடந்தால் அது யார் என்று சொல்கிறேன்" என்று பேசியிருக்கிறார் நடிகர் சூரி.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...