சேலை ஊஞ்சலில் கழுத்து இறுகிய நிலையில் சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை
Operation Sindoor: 'போராளியின் சண்டை தொடங்குகிறது..!' - ‘ஆபரேஷன் சிந்தூர்' குறித்து ரஜினிகாந்த்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்தத் தாக்குதலுக்கு எதிராகப் பலரும் குரல் கொடுத்திருந்தனர்.
இந்தப் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில்தான் ‘ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை இந்திய ராணுவம் நடத்தியிருக்கிறது.
இந்த ஆபரேஷனில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள 9 தீவிரவாத இடங்களை இந்திய இராணுவம் குறி வைத்து தாக்கி இருக்கிறது.
இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை வரவேற்று அரசியல் தலைவர்கள் பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்தும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்துப் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “ போராளியின் சண்டை தொடங்குகிறது. திட்டம் முடியும் வரை நிறுத்தம் இருக்காது. முழு நாடும் உங்களுடன் உள்ளது” என்று பிரதமர் மோடியை டேக் செய்து பதிவிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs